2021 CA மே மாத தேர்வுக்கான அட்டவணை – ICAI வாரியம் வெளியீடு!!

0
2021 CA மே மாத தேர்வுக்கான அட்டவணை - ICAI வாரியம் வெளியீடு!!
2021 CA மே மாத தேர்வுக்கான அட்டவணை - ICAI வாரியம் வெளியீடு!!
2021 CA மே மாத தேர்வுக்கான அட்டவணை – ICAI  வாரியம் வெளியீடு!! 

இந்திய பட்டய கணக்காளர்கள் வாரியம் (ICAI) பட்டயக் கணக்கறிஞர்களுக்கான (CA) மே மாத தேர்விற்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. தேர்வு குறித்த முழுமையான விவரங்களை காணலாம்.

இந்திய பட்டய கணக்காளர்கள் வாரியம் ( ICAI ):

இந்திய பட்டய கணக்காளர்கள் வாரியம் பட்டயக் கணக்கறிஞர்கள் தொழிலை வழிநடத்த உருவாக்கப்பட்ட சட்டபூர்வமான நிறுவனம் ஆகும். பட்டயக் கணக்காளராக விரும்பும் நபர்கள் ICAI வாரியம் நடத்தும் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசிடம் இருந்து சான்றிதழ் வழங்கப்படும். இவர்கள் மத்திய அரசால் பதிவு செய்யப்பட்ட பட்டயக் கணக்காளராக அறிவிக்கப்படுவார்கள்.

கொரோனா காலத்தில் ரூ.11,000 கோடி கல்விக்கடன் – ஆய்வு முடிவுகள் வெளியீடு!!

CA தேர்வு:

பட்டயக் கணக்கறிஞர்கள் (CA) பணிக்கான தேர்வுகளை தேர்வு வாரியம் ஆண்டுதோறும் நவம்பர் மற்றும் மே என இரண்டு முறை நடத்தும். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் தேர்வில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்காக இம்முறை ஜனவரி மாதத்தில் ஒரு கூடுதல் வாய்ப்பு அளிக்கப்பட்டு தேர்வு ஜனவரி 31ம் தேதி நடந்தது.

2021 மே மாத தேர்வு:

இந்திய பட்டய கணக்காளர்கள் வாரியம் (ICAI) பட்டயக் கணக்கறிஞர்கள் (CA) பணிக்கான மே மாத தேர்விற்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. இடைநிலை தேர்வை பழைய பாடத்திட்டத்தின் படி எழுதும் முதல் பிரிவினருக்கு மே மாதம் 22, 24, 27 மற்றும் 29ம் தேதிகளிலும், இரண்டாம் பிரிவினருக்கு மே 31, ஜூன் 2, 4ம் தேதிகளிலும் தேர்வு நடைபெறுகிறது. புதிய பாடத்திட்டத்தின் கீழ் இடைநிலை முதல் பிரிவு தேர்வர்களுக்கு மே 22, 23, 27,29ம் தேதிகளிலும், இரண்டாம் பிரிவினருக்கு மே 31, ஜூன் 2, 4, 6ம் தேதிகளிலும் தேர்வு நடத்தப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

இறுதி தேர்வுகளுக்கான முதல் பிரிவினருக்கு புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்தில் எழுதுபவர்களுக்கு மே 21,23,25,28ம் தேதியிலும், இரண்டாம் பிரிவினருக்கு மே 30, ஜூன் 1,3, மற்றும் 5ம் தேதிகளிலும் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு வாரியம் மே 26ம் தேதி புத்த பூர்ணிமா அன்று எந்த தேர்வையும் நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!