AFCAT 02 / 2023 தேர்வுக்கு 276 காலியிடங்கள் – இந்திய விமானப் படை அறிவிப்பு || விண்ணப்பிக்க தயாராகுங்கள்!

0

AFCAT 02 / 2023 தேர்வுக்கு 276 காலியிடங்கள் – இந்திய விமானப் படை அறிவிப்பு || விண்ணப்பிக்க தயாராகுங்கள்!

இந்திய விமானப்படையில் (IAF) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் 2023 ஆம் ஆண்டுக்கான AFCAT 02 / 2023 தேர்வு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு மூலம் Flying Branch மற்றும் Ground Duty Branch பிரிவுகளில் காலியாக உள்ள குறுகிய கால ராணுவச் சேவை அதிகாரி (SSC) பணியிடங்களுக்கான பயிற்சிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்திய விமானப் படை (IAF)
தேர்வின் பெயர் AFCAT 02 / 2023
பணியிடங்கள் 276
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
AFCAT 02 / 2023 பணியிடங்கள்:
இந்திய விமானப் படை நடத்த உள்ள AFCAT 02 / 2023 தேர்வு மூலம் குறுகிய கால ராணுவச் சேவை அதிகாரி (SSC) பணிக்கான 276 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

AFCAT 02 / 2023 கல்வி விவரம்:

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Graduate Degree, BE, B.Tech, Post Graduate Degree தேர்வு பெற்றவராக இருக்க வேண்டும்.

AFCAT 02 / 2023 வயது விவரம்:
  • Flying Branch சார்ந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 20 வயது முதல் 24 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Ground Duty Branch சார்ந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 20 வயது முதல் 26 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.2 லட்சம் சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

AFCAT 02 / 2023 ஊதிய விவரம்:

இத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படும் நபர்களுக்கு பணியின் போது Pay Matrix Level – 10 என்ற ஊதிய அளவின் படி குறைந்தது ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

AFCAT 02 / 2023 தேர்வு செய்யும் முறை:

இந்த AFCAT 02 / 2023 தேர்வானது Online Written Exam Method மூலம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

AFCAT 02 / 2023 விண்ணப்ப கட்டணம்:
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ரூ.250/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

AFCAT 02 / 2023 விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த AFCAT 02 / 2023 தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் 01.06.2023 அன்று முதல் 30.06.2023 அன்று வரை அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் கொடுக்கப்படும் விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification Link
Online Application Link

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!