ரேஷன் அட்டைகளில் மொபைல் எண்ணை இணைப்பது எப்படி? வழிமுறைகள் இதோ!

0
ரேஷன் அட்டைகளில் மொபைல் எண்ணை இணைப்பது எப்படி? வழிமுறைகள் இதோ!
ரேஷன் அட்டைகளில் மொபைல் எண்ணை இணைப்பது எப்படி? வழிமுறைகள் இதோ!
ரேஷன் அட்டைகளில் மொபைல் எண்ணை இணைப்பது எப்படி? வழிமுறைகள் இதோ!

இந்தியாவில் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக விளங்கும் ரேஷன் கார்டுடன் தங்களின் மொபைல் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. அதற்கான வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

ரேஷன் கார்டு:

இந்தியாவில் அந்தந்த மாநில அரசால் வழங்கப்படும் ரேஷன் கார்டு மூலம் ஏழை எளிய மக்கள் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் உதவும் வகையில் புலம்பெயர் தொழிலாளர்களை கருத்தில் கொண்டு ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை கொண்டு வந்தது. இதன் மூலம் மற்ற மாநில ரேஷன் அட்டைதாரர்களும் பயோமெட்ரிக் முறையில் தங்களின் இருப்பிடத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் பொருட்களை பெறலாம். இந்த திட்டம் மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள் பயன்பெறுகின்றனர்.

Exams Daily Mobile App Download

ரேஷன் கார்டு அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமில்லை முக்கிய இருப்பிட சான்றாகவும் விளங்குகிறது. இத்தகைய ஆவணத்தை நாம் அப்டேட்டாக வைத்திருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக ரேஷன் கார்டில் மொபைல் எண்ணை அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும். அப்போது தான் பிற விவரங்களை அப்டேட் செய்ய முடியும். மேலும் மாதந்தோறும் நீங்கள் வாங்கும் ரேஷன் பொருட்கள் குறித்த குறுஞ்செய்தியும் மொபைல் எண்ணிற்கு வரும். அதனால் மொபைல் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைக்க வேண்டும்.

SBI வங்கியில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க ஜூன் 7ம் தேதி கடைசி நாள்!

ரேஷன் கார்டுடன் மொபைல் எண்ணை இணைக்க ஒவ்வொரு தாலுக்கா அலுவலகத்திலும், தனியாக ரேஷன் கார்டு தொடர்பான உதவி மையம் அமைக்கப்பட்டிருக்கும். அங்கு சென்றும் செல்பேசி எண்ணை மாற்றிக்கொள்ளலாம். மேலும் 1967 என்ற உதவி எண்ணை அழைத்து மொபைல் எண்ணை மாற்றுவது தொடர்பான சந்தேகங்களை கேட்டறியலாம். மொபைல் எண் மாற்ற ஆதார் எண் மற்றும், குடும்ப அட்டையின் நகல் அவசியமாகும். அதிகாரியிடம், மொபைல் எண்ணை இணைப்பதற்கான படிவத்தை பூர்த்தி செய்து புதிய எண்ணை மாற்றிக்கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here