முதுநிலை நீட் தேர்வு 2021 முடிவுகள் வெளியீடு – தெரிந்து கொள்வது எப்படி?

0
முதுநிலை நீட் தேர்வு 2021 முடிவுகள் வெளியீடு - தெரிந்து கொள்வது எப்படி?
முதுநிலை நீட் தேர்வு 2021 முடிவுகள் வெளியீடு - தெரிந்து கொள்வது எப்படி?
முதுநிலை நீட் தேர்வு 2021 முடிவுகள் வெளியீடு – தெரிந்து கொள்வது எப்படி?

நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதியன்று நடைபெற்ற முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதனை எவ்வாறு தெரிந்து கொள்வது என்பது பற்றி இப்பதிவில் காணலாம்.

தேர்வு முடிவுகள்:

முதுகலை பொது மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் பட்டயப் படிப்புகளுக்கான நீட் தேர்வு என்பிஇ எனப்படும் தேசிய தேர்வுகள் வாரியம் மூலம் நடத்தப்பட்டது. நடப்பாண்டில் இந்த தேர்வை எழுத 1,75, 063 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதியன்று முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. மொத்தம் 260 நகரங்களில் 800 மையங்களில் தேர்வு நடைபெற்றது.

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – 10 லட்சம் பேர் பதிவு!

ஏராளமானோர் கலந்து கொண்ட 2021 ஆம் ஆண்டுக்கான முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதன்படி தேர்வு முடிவுகளை மாணவர்கள் அதிகாரபூர்வ இணையத்தை பயன்படுத்தி பெற்றுக் கொள்ளலாம் என கூறப்படுகிறது. இது குறித்து NBE தேசிய கல்வி வாரியம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் றிவிப்பை வெளியிட்டுள்ளது.

பொது பிரிவினை சேர்ந்த மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்ணாக 50th Percentile கட் ஆப் மதிப்பெண்ணாக 800 க்கு 302ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினை சேர்ந்த மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்ணாக 40th Percentile கட் ஆப் மதிப்பெண்ணாக 800 க்கு 265ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் UR-PwD பிரிவினை சேர்ந்த மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்ணாக 45th Percentile கட் ஆப் மதிப்பெண்ணாக 800 க்கு 283ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கண்ணம்மாவின் மகள் தான் ஹேமா, உண்மையை அறிந்து கொண்ட பாரதி? வெளியான போட்டோ!

தேர்வு முடிவுகளை பெறுவது எப்படி?

மாணவர்கள் nbe.edu.in என்ற இணையதளத்திற்கு சென்று NEET PG 2021 என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன்பின் தேர்வு குறித்த அனைத்து விவரங்களும் உள்ளடக்கிய பக்கம் ஒன்று திறக்கும். அந்த பக்கத்தில் இருக்கும் NEET PG 2021 Results என்பதை கிளிக் செய்து பின்னர் பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடுவதன் மூலம் நீட் தேர்வு முடிவுகளை பெறலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!