கண்ணம்மாவின் மகள் தான் ஹேமா, உண்மையை அறிந்து கொண்ட பாரதி? வெளியான போட்டோ!

1
கண்ணம்மாவின் மகள் தான் ஹேமா, உண்மையை அறிந்து கொண்ட பாரதி? வெளியான போட்டோ!
கண்ணம்மாவின் மகள் தான் ஹேமா, உண்மையை அறிந்து கொண்ட பாரதி? வெளியான போட்டோ!
கண்ணம்மாவின் மகள் தான் ஹேமா, உண்மையை அறிந்து கொண்ட பாரதி? வெளியான போட்டோ!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் படப்பிடிப்பில் பாரதி தனது 2 மகள்களுடன் இணைந்து எடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாக, ஒருவேளை ஹேமாவும், கண்ணம்மாவின் மகள் என்கிற உண்மை பாரதிக்கு தெரிந்திருக்குமோ என ரசிகர்கள் சந்தேகத்தை கிளப்பியுள்ளனர்.

பாரதி கண்ணம்மா

மக்களின் மனம் கவர்ந்த முக்கியமான தொடர்களில் ஒன்றான ‘பாரதி கண்ணம்மா’ சில முக்கிய திருப்பங்களுடன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த கதையில் கடந்த சில நாட்களாக ரசிகர்களை குஷிப்படுத்தும் விதத்தில் இருக்கும் சில காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அதாவது கடந்த வாரத்தில் ஒளிபரப்பான எபிசோடுகளில் பாரதி, கண்ணம்மாவை ஏற்றுக்கொள்வது போலவும், தன் தவறை ஒப்புக்கொண்டது போலவும் இருக்கும் ப்ரோமோ ஒன்று வெளியானது.

பள்ளிகள் மூடல், விடுமுறை அறிவிப்பு – 9 மாணவர்களுக்கு கொரோனா எதிரொலி!

ஆனால் அது பாரதியின் நடிப்பு என்று எபிசோடுகள் வெளியானதும் தெரிந்தது. இருந்தாலும் இந்த வாரம் வெளியான ப்ரோமோ ரசிகர்களை சற்று திருப்திபடுத்தியுள்ளது. அந்த வகையில் நெஞ்சுவலி என நடிக்கும் வேணு, பாரதியையும், கண்ணம்மாவையும் சேர்த்து வைக்க திட்டம் போடுகிறார். இது தெரியாமல் பாரதியும், கண்ணம்மாவும் தாங்கள் சேர்ந்து வாழ்வதாக சத்தியம் செய்ய உள்ளனர். என்றாலும் இதற்கு அடுத்த கதைக்களம் என்னவாக இருக்கும் என்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

அக்.19ம் தேதி 1 முதல் 8 & 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!

இதற்கிடையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் படப்பிடிப்பு தளத்தில் பாரதி, ஹேமா மற்றும் லட்சுமியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதன் மூலம் கண்ணம்மா, பாரதியின் வீட்டுக்கு வந்திருக்கலாம் எனவும் ஒருவேளை ஹேமாவும் கண்ணம்மாவின் மகள் தான் என்கிற உண்மையை பாரதி கண்டிபிடித்திருப்பார் என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!