PM கிசான் திட்டத்தின் ரூ.2000 நிதிப்பணத்தை பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
PM கிசான் திட்டத்தின் ரூ.2000 நிதிப்பணத்தை பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
PM கிசான் திட்டத்தின் ரூ.2000 நிதிப்பணத்தை பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
PM கிசான் திட்டத்தின் ரூ.2000 நிதிப்பணத்தை பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

மத்திய அரசின் PM கிசான் திட்டத்தின் நிதிப்பணத்தை பெற விரும்புபவர்கள் முதலில் தங்களை இத்திட்டத்தின் கீழ் இணைத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும். இதற்கான எளிய வழிமுறைகள் இப்பதிவில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

கிசான் திட்டம்

நாடு முழுவதும் உள்ள அனைத்து சிறு, குறு நிலங்களை வைத்திருக்கும் விவசாயி குடும்பங்கள் தங்களது வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக மத்திய அரசாங்கம் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மத்திய அரசின் பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.6,000 நிதி உதவியாக வழங்கப்படுகிறது. குறிப்பாக, இந்த நிதிப்பணம் ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் தலா ரூ.2000 வீதம் மூன்று சம தவணைகளில் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு செலுத்தப்படும்.

Exams Daily Mobile App Download

அதன்படி, விவசாய நிலங்களை தங்கள் பெயரில் வைத்துள்ள குடும்பங்கள் அனைத்தும் இந்த திட்டத்தின் கீழ் பலன்களைப் பெற தகுதியுடையவர்கள் ஆவர். தவிர கிசான் திட்டத்தின் பயனாளிகளின் குடும்பத்தில் உள்ள ஒருவர் வருமான வரி செலுத்துபவராக இருந்தால் அந்த குடும்பம் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியற்றதாக கருதப்படும். இப்போது பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் பலன்களைப் பெற ஒரு விவசாயி எவ்வாறு பதிவு செய்யலாம் என்பது குறித்த முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி,

  • முதலில் pmkisan.gov.in என்ற இணையதளத்தை திறக்கவும்.
  • அதில், ஃபார்மர்ஸ் கார்னர் என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
  • இப்போது ‘புதிய விவசாயி பதிவு’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • இதில் கிராமப்புற விவசாயி பதிவு அல்லது நகர்ப்புற விவசாயி பதிவை தேர்ந்தெடுக்கவும்.
  • தொடர்ந்து ஆதார் எண், மொபைல் எண்ணை உள்ளிட்டு, மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து, ‘Get OTP’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது OTPஐ பூர்த்தி செய்து பதிவு செய்ய தொடரவும்.

  • தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலம், மாவட்டம், வங்கி விவரங்கள் மற்றும் தனிப்பட்ட விவரங்கள் போன்ற கூடுதல் விவரங்களை உள்ளிடவும்.
  • இந்த விவரங்கள் அனைத்தும் ஆதாரில் இருப்பது போல இருக்க வேண்டும்.
  • இப்போது ‘ஆதார் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கவும்’ என்பதை கிளிக் செய்யவும்.
  • உங்கள் ஆதார் அங்கீகாரம் வெற்றிகரமாக முடிந்ததும், நில விவரங்களை உள்ளிட்டு துணை ஆவணங்களைப் பதிவேற்றி சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!