பான் கார்டு தொலைந்து விட்டால் மீண்டும் பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள்!

0
பான் கார்டு தொலைந்து விட்டால் மீண்டும் பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள்!
பான் கார்டு தொலைந்து விட்டால் மீண்டும் பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள்!
பான் கார்டு தொலைந்து விட்டால் மீண்டும் பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள்!

நமது பான்கார்டு வங்கி பரிவர்த்தனைகளுக்கு மிகவும் முக்கியமான ஆவணமாக உள்ள நிலையில், அது தொலைந்து போய்விட்டால் எப்படி மீண்டும் பெறுவது என்பதனை இந்த பதிவில் காண்போம்.

வழிமுறைகள்:

நமது வங்கி பரிவர்த்தனைகள் முதல் சொத்து பதிவு முதல் அனைத்திற்கும் பான் கார்டு அவசியமாகும். மேலும், வருமான வரி செலுத்துவது, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பெறுவதற்கு போன்ற பல விஷயங்களுக்கும் தேவைப்படுகிறது. பான் கார்டில் உள்ள 10 இலக்க எண் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் மிகவும் முக்கியமாகும். இவ்வளவு முக்கியமான பான் கார்டு தொலைந்து விட்டால் எவ்வாறு எளிய முறையில் பெறுவது என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாவிட்டால் தளர்வுகள் வாபஸ் – மத்திய அரசு!

இதற்காக வருமானவரித்துறை ஒரு புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. பல வசதிகளும் தற்போது ஆன்லைன் முறையில் ஆரம்பிக்கப்பட்டு விட்ட நிலையில், தற்போது இ- பான் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இ-பான் என்பது வருமான வரித் துறையால் வழங்கப்பட்ட டிஜிட்டல் பான் கார்டு ஆகும். இதற்கு கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. ஆதார் எண் இருந்தால் மட்டும் போதும் பான் கார்டு பெற்றுவிடலாம். இந்த பான் கார்டினை tin – NSDL அல்லது UTIITSL போன்ற இணைய தளங்களிலும் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

இ- பான் கார்டு பெரும் வழிமுறைகள்:

  • முதலில், வருமானவரித்துறையின் https://www.incometax.gov.in/iec/foportal என்ற அதிகாரபூர்வ இணையத்திற்கு செல்ல வேண்டும்.
  • பின்னர், ‘Instant e-PAN’ என்ற தேர்வை தேர்வு செய்ய வேண்டும்.
  • அடுத்து, ‘New e-PAN’ என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும்.
  • இப்பொழுது உங்கள் பான் எண் ஐ பதிவு செய்ய வேண்டும். பான் எண் மறந்துவிட்டால், உங்களது ஆதார் எண்ணை பதிவு செய்யலாம்.

TN Job “FB  Group” Join Now

  • பின்னர் தோன்றும் விதிமுறைகளை படித்து விட்டு ‘Accept’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • இப்பொழுது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும். அதனை பதிவு செய்ய வேண்டும்.
  • பின்னர் ‘Confirm’ என்பதை தேர்வு செய்த பின்னர், உங்கள் இமெயில் ஐடி க்கு இ-பான் கார்டு PDF Formatல் அனுப்பப்படும்
  • இப்போது இ-பான் கார்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!