Daily Current Affairs July 06 2021 in Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

0
Daily Current Affairs July 06 2021 in Tamil
Daily Current Affairs July 06 2021 in Tamil

தினசரி நடப்பு நிகழ்வுகள் – 06 ஜூலை 2021

Top Current Affairs June 2021 in Tamil for Daily, Monthly & Yearly. Here We have provided Today Important Current Affairs, Daily Updated Events & Latest Current Affairs in Tamil for TNPSC,TN Police, TNFUSRC, TNEB, TNPCB, Railway, SSC, Banking, UPSC Examinations. Our Tamil Current Affairs Covers National Current Events, Economy, Defense, International Affairs etc., Current Affairs Pdf is very use full to all Competitive Exams. So those who want to clear the Examination can get updated daily current affairs in our blog. Prepare Well for the Upcoming Examination….!

சர்வதேச நிகழ்வுகள்

புதிய வானிலை ஆய்வு செயற்கைகோள்

 • புதிய வானிலை ஆய்வு செயற்கைகோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது
 • லாங் மார்ச் 4சி ராக்கெட் மூலம் சீனாவில் உள்ள ஜிகுவான் செயற்கைகோள் ஏவுதள மையத்திலிருந்து செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது
 • பயன் : வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்தவும் கடல் வெப்பநிலையை கண்காணிக்கவும் இந்த செயற்கைகோள் உதவும் .
 • 8 ஆண்டுகள் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள உலகளாவிய பனிப்படலம் கடல்நீர் வெப்பநிலை இயற்கை பேரிடர்கள் ஆகியவற்றை கண்காணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
 • வானியல் தரவுகளை சேகரிப்பதில் உள்ள இடைவெளியை இந்த செயற்கைகோள் மூலம் நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
தேசிய நிகழ்வுகள்

உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிக்கான இந்தியாவின் கோவின் குளோபல் கான்க்ளேவை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

 • கோவின் தொழிற்நுட்பத்தை உலகநாடுகளுடன் பகிர்ந்துகொள்வதற்கு இந்தியா உறுதி கொண்டுள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்
 • மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதை எளிமைப்படுத்தும் நோக்கில் கோவின் வலைத்தளத்தையும் செய்யலியையும் மத்திய அரசு உருவாக்கியது
 • கோவின் வலைதளத்தின் தொழிற்நுட்பத்தை மற்ற நாடுகளுக்கு இலவசமாக வழங்குவதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளது
 • கோவின் சர்வதேச மாநாட்டை மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தொடங்கிவைத்தார்.
 • சுகாதார அமைச்சகம் தனது சமூக ஊடக தளங்களில் கோவிட் குருகூல் என்ற தகவல் வீடியோ தொடரை அறிமுகப்படுத்துகிறது
 • இது தொற்றுநோய் குறித்த உண்மையான தகவல்களை பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
 • முன்னணி பொது சுகாதார வல்லுநர்கள் கொள்கை வகுப்பாளர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் சுகாதார வல்லுநர்கள் இந்தத் தொடரில் பங்கேற்பார்கள்,
 • மேலும் கோவிட் பற்றி மக்கள் புரிந்து கொள்ளவும் அதை உணர்ந்து செயல்படவும் தடுப்பூசிகளைச் சுற்றியுள்ள கட்டுக்கதைகளை உடைக்கவும் இந்த தளங்கள் உதவும்

52 வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெற உள்ளது

 • தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இந்தியாவின் சர்வதேச திரைப்பட விழாவின் 52 வது பதிப்பிற்கான விதிமுறைகளையும் சுவரொட்டியையும் வெளியிட்டார்.
 • இந்த ஆண்டு நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெற உள்ளது
 • 1952 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட சர்வதேச திரைப்பட விழா ஆசியாவின் பழமையான மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச திரைப்பட விழாக்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
 • இந்திய சினிமாவின் மேஸ்ட்ரோ என்று அழைக்கப்படும் சத்யஜித் ரேயின் பிறந்த நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இம்முறை திரைப்பட விழாக்கள் அவரின் கலந்தகால நினைவுகளுடன் கூடிய அஞ்சலி செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது

ஆயுஷ் துறையின் அமைச்சர் ஸ்ரீ கிரேன் ரிஜிஜு ஐந்து முக்கியமான இணையதளங்களைத் தொடங்கினார்

 • ஆயுர்வேத தரவுத்தொகுப்புடன் தொடர்புடைய போர்ட்டலை மற்றும் போர்ட்டல்களுடன் தொடங்கினார்.
 • இந்திய பாரம்பரிய மற்றும் இந்திய மருத்துவ முறை தொடர்பான நான்கு போரட்டல்களை வெளியிட்டார்
 • போர்ட்டலில் ஆயுர்வேதத்துடன் தொடர்புடைய தரவுத்தொகுப்பைச் சேர்த்த பிறகு, ஆயுர்வேத மருத்துவ பரிசோதனைகள் உலகளாவிய தெரிவுநிலையைக் கொண்டிருக்கும், மேலும் ஆயுர்வேத ஆராய்ச்சியை வலுப்படுத்துவதற்கான காரணத்தை இது மேலும் ஏற்படுத்தும்.
 • போர்டல் ஆயுர்வேதத்தின் வரலாற்று உண்மைத்தன்மையைக் காண்பிப்பதில் பெரும் உதவியாக இருக்கும்.
 • போர்ட்டலின் உதவியுடன் எவரும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை ஆன்லைனில் அணுகலாம். இந்த புத்தகங்கள் இந்திய மருத்துவ பாரம்பரியத்துடன் தொடர்புடையவை.
 • போர்டல், ஆயுர்வேதம், யோகா, யுனானி சித்தா மற்றும் சோவா- ரிக்பா கையெழுத்துப் பிரதிகள் மற்றும் பட்டியல்களுக்கான களஞ்சியமாகும்.
 • போர்டல் ஆராய்ச்சி மேலாண்மை தகவல் அமைப்பு அல்லது சுருக்கமாக ஒரு ஆராய்ச்சி வழிகாட்டல் தளமாகும்.

உலகின் மூன்றாவது பெரிய கிரிக்கெட் அரங்கம் ஜெய்ப்பூரில் அமைக்கப்படவுள்ளது

 • உலகின் மூன்றாவது பெரிய கிரிக்கெட் மைதானம் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் கட்டப்பட உள்ளது.
 • முதலாவது: குஜராத் அகமதாபாத், நரேந்திர மோடி ஸ்டேடியம்
 • இரண்டாவது :ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் ஸ்டேடியம்
 • இந்த அரங்கம் ஆண்டுகளில் சுமார் ரூ. 650 கோடி செலவில் கட்டப்பட உள்ளது
 • கே.என் பட்டாச்சார்ஜி திரிபுராவின் புதிய லோகாயுக்தா வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்
 • மூத்த வழக்கறிஞர் கல்யாண் நாராயண் பட்டாச்சார்ஜி திரிபுராவின் புதிய லோகாயுக்தாவாக மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்

லோகாயுக்தா சட்டம் 2008 முதல் திரிபுராவில் நடைமுறையில் உள்ளது.

 • கே.என். பட்டாச்சார்ஜி திரிபுராவின் மூன்றாவது லோக் ஆயுக்தா மற்றும் ஒரு வழக்கறிஞராக பதவியை வகித்த முதல் நபர் ஆவர் .
 • மிகவும் புதுமையான முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனம் 2021 விருதை இன்வெஸ்ட்இந்தியா வென்றது
 • குளோபல் வழங்கும் உலகின் மிக புதுமையான முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனம் 2021 விருதை இன்வெஸ்ட்இந்தியா வென்றது.
 • இன்வெஸ்ட் இந்தியா என்பது தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான செயல்படும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும் இது 2009 இல் நிறுவப்பட்டது.

தகவல் தொழிற்நுட்ப சட்டப் பிரிவு-66ஏ

 • இந்த சட்டப்பிரிவுக்கு எதிராக முதன்முதலில் மஹாராஷ்டிரமாநிலம் தானே மாவட்டத்தில் இரண்டு சட்டக்கல்லூரி மாணவிகள் ,2012ம் ஆண்டு பால் தாக்கரே மறைவிற்கு மும்பையில் முழு அடைப்பு நடத்தப்பட்டதற்கு எதிராக கருத்து பதிவிட்டதற்காக தகவல் தொழிற்நுட்ப சட்டப் பிரிவு-66ஏ ன் கீழ் கைதுசெய்யப்பட்டனர் .
 • இதற்கு உச்சநீதிமன்றம் கருத்து சுதந்திரமும் , கருத்துகளை வெளிப்படுத்துவதுமே மேலானது.
 • எந்த ஒரு நபருக்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 21 வழங்கும் அடிப்படை உரிமை மறுக்கப்படக்கூடாது என்று கூறி தகவல் தொழிற்நுட்ப சட்டப் பிரிவு 66ஏ நீக்கப்படுவதாக 2015ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி தீர்ப்பளித்தது.

ஸ்டான் சுவாமி மறைவு

 • எல்கர் பரிஷத் வழக்கில் தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மனித உரிமை ஆர்வலர் ஸ்டான் சுவாமி ஜூலை 05 ,2021 ல் மறைந்தார்.
 • திருச்சியை சேர்ந்தவரான ஸ்டேன் சுவாமி ,ஜார்கன்ட் மாநிலத்துக்கு சென்று அங்குள்ள பழங்குடியினரின் உரிமைக்காக கடந்த 30 ஆண்டுகளாக போராடி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

பழனி அருகே அக்கமநாயக்கன்புதூரில் கி .பி .2ம் நூற்றாண்டை சேர்ந்த அரிக்கண்ட சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

 • வீரதீர செயல் புரிந்தவர்களின் அடையாளமாகவே அரிக்கண்ட சிற்பங்கள் கருதப்படுகிறது
 • பழங்காலத்தில் அரிக்கண்டம் கொடுக்கும் நிகழ்ச்சி பெரிய விழாவாக கொண்டாடப்பட்டுள்ளது
 • தமிழகத்தில் காகிதம் இல்லாத இ -பட்ஜெட் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

இ -பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து பேரவை விதிகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது

 • எம் .எல் ஏ க்களுக்கு டேப்லெட், கையடக்க கணினி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது
 • நவீன தொழில் நுட்பத்துக்கு ஏற்ப உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது
விளையாட்டு/ அறிவியல் தொழிற்நுட்பம்

2021 டோக்கியோ பாராலிம்பிக்கிற்கான இந்தியக் குழுவின் கொடி ஏந்தியவராக மரியப்பன் தங்கவேலு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

 • தமிழ்நாட்டை சேர்ந்த மரியப்பன் தங்கவேலு 2020 டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியக் குழுவின் கொடி ஏந்தியவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
 • அவர் 2016 ரியோ பாரா ஒலிம்பிக்கில் ஆண்களின் உயரம் தாண்டுதல் (டி -42) போட்டிகளில் தங்கத்தை வென்றார்.
 • 2020 டோக்கியோ வில் நடைபெற உள்ள பாராஒலிம்பிக் போட்டிகளில் ஆண்களின் உயரம் தாண்டுதலில் (டி -42) தங்கத்தை வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்திய பெண் கிரிக்கெட் வீரர் மிதாலி ராஜ் பெண்களின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்த வீரர் ஆவார்

 • இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பெண்கள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற பெருமையை பெற்றார்.
 • இங்கிலாந்து கேப்டன் சார்லோட் எட்வர்ட்ஸ் சாதனையை முறியடித்துள்ளார்.
 • பெண்களின் சர்வதேச கிரிக்கெட்டில் ரன்கள் எடுத்த ஒரே வீரர்கள் மிதாலி ராஜ் மற்றும் சார்லோட் எட்வர்ட்ஸ்.

2021 ஒலிம்பிக் போட்டி தொடக்க நிகழ்ச்சி அணிவகுப்பின்போது இந்தியாவின் சார்பில்மேரி கோம், மன்பிரீத் சிங் ஆகியோர் தேசியக்கொடியேந்தி செல்ல இருக்கின்றனர்.

 • டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடக்க நிகழ்ச்சி அணிவகுப் பின்போது இந்தியாவின் சார் பில் குத்துச்சண்டை வீராங் கனை மேரி கோம், ஹாக்கி வீரர் மன்பிரீத் சிங் ஆகியோர் தேசியக்கொடியேந்திச்செல்ல இருக்கின்றனர்.
 • மேரி கோம் பங்குபெறும் கடைசி ஒலிம்பிக் போட்டி இதுவாகும்
 • அதேபோல், நிறைவு நிகழ்ச்சி அணிவகுப்பின்போது மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தேசியக்கொடியேந்திச்செல்ல இருக்கிறார்
 • பாலின சமத்துவத்தை கடைப்பிடிக்கும் வகையில் முதல் முறையாக, டோக் கியோ ஒலிம்பிக் போட்டியின் தொடக்க நிகழ்ச்சி அணிவகுப் பில் ஒவ்வொரு நாட்டின் சார் பிலும் தலா ஒரு வீரர் மற்றும் வீராங்கனை கொடியேந்திச் செல்வார்கள் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய கடற்படை தடகள வீரர் எம்.பி ஜாபீர் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளார்

 • இந்திய கடற்படையின் ஏஸ் தடகள வீரர் எம்.பி. ஜபீர் 400 மீட்டர் தடைகளில் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளார்.
 • 25 வயதான கடற்படை மாலுமி கேரளாவின் மலப்புரம் பகுதியைச் சேர்ந்தவர். தற்போது ஒலிம்பிக் தரவரிசையில் 34 வது இடத்தில் உள்ளார்
 • விம்பிள்டன் டென்னிஸ் போட்டில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் காலிறுதிசுற்றுக்கு முன்னேறினார்
 • விம்பிள்டன் டென்னிஸ் போட்டில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் கிறிஸ்டியன் காரினை தோற்கடித்து காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டில் ஆஷ்லி பார்ட்டி காலிறுதிக்கு முன்னேற்றம்

 • பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி ,பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான பார்போரா கிராஜ்சிகோவாவை (செக் குடியரசு) வெளியேற்றி முதல் முறையாக காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

யூரோ கோப்பை கால்பந்து 2020

 • யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலி-ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன
 • ஸ்பெயின் இதுவரை 3 முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது
 • ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் இத்தாலி- ஸ்பெயின் மோதிக்கொள்வது
 • இது 4 வது முறை ஆகும்
முக்கிய தினங்கள்

ஷியாமா பிரசாத் முகர்ஜி பிறந்த தினம் – ஜூலை 06

 • பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனர் டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி.
 • அவர் ஒரு பிரபல இந்திய அரசியல்வாதி, பாரிஸ்டர் மற்றும் கல்வியாளராக இருந்தார் மற்றும் ஜவஹர்லால் நேருவின் அமைச்சரவையில் தொழில் மற்றும் வழங்கல்( Industry and Supply)அமைச்சராக பணியாற்றினார்

உலக உயிரியல் தினம்- ஜூலை 06

 • எபோலா ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் வெஸ்ட் நைல் வைரஸ் போன்ற நோய்க்கு எதிராக வழங்கப்பட்ட முதல் தடுப்பூசியை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 6 ஆம் தேதி உலக உயிரியல் தினம் அனுசரிக்கப்படுகிறது

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!