தொலைந்த பள்ளி, கல்லூரி சான்றுகளை மீண்டும் பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள்!

1
தொலைந்த பள்ளி, கல்லூரி சான்றுகளை மீண்டும் பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள்!
தொலைந்த பள்ளி, கல்லூரி சான்றுகளை மீண்டும் பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள்!
தொலைந்த பள்ளி, கல்லூரி சான்றுகளை மீண்டும் பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள்!

உங்கள் பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் தொலைந்து விட்டால் அரசிடம் இருந்து தொலைந்ததற்கான சான்றை ஆன்லைன் மூலம் பெறும் எளிய வழிமுறை இப்பதிவில் வழங்கப்பட்டு உள்ளது.

சான்று பெறும் முறைகள்:

மாணவர்களுக்கு பள்ளி, கல்லூரிகளில் படித்ததற்கான சான்றுகள் வழங்கப்படும். அவை மிகவும் முக்கிய ஆவணமாக கருதப்டுகிறது. மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தில் பணிக்கு செல்வதற்கு இந்த சான்றிதழ்கள் தேவைபடுகிறது. அரசின் சில நலத்திட்டங்களை பெறுவதற்கும் சான்றிதழ்கள் அவசியமாகும். இந்த முக்கிய சான்றிதழ்களை நாம் பணிகளுக்காக வெளியில் எடுத்து செல்லும் போதோ அல்லது வேறு சில காரணங்களுக்கு பிற இடங்களில் சமர்பிக்கும் போதோ அவை தொலைந்து போவதற்கான வாய்ப்புகள் உண்டு.

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு விருப்ப தேர்வு – அரசுக்கு கோரிக்கை!

மேலும் சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களினால் அழிந்து விட்டாலோ அல்லது எதிர்பாராத விதமாக தீ விபத்துகளில் சேதமாகியிருந்தாலோ நாம் புதிய சான்று பெற முடியும். முதலில் காவல் நிலையத்தில் தேவையான தகவல்களுடன் புகார் அளிக்க வேண்டும். பின்னர் காவல்நிலையத்தில் சான்றிதழை கண்டுப்பிடிக்க முடியவில்லை என்று கொடுக்கப்படும் சான்றிதழை பெற வேண்டும். அதன் பிறகு புதிய சான்றிதழ் பெற உரிய அலுவலர்களை அணுகி பெற முடியும். தற்போது தொலைந்ததற்கான சான்றை ஆன்லைன் மூலம் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தொலைந்ததற்கான சான்றை ஆன்லைன் மூலம் பெறும் வழிமுறைகள் :
  • இதற்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரரின் புகைப்படமும், இருப்பிட சான்றும் தேவை.
  • https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில் சிட்டிசன் லாகின் மூலம் உள் நுழைய வேண்டும். பிறகு Revenue Department என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  • பிறகு புதிய முகப்பு திரை உருவாகும். அதில் Certificate for loss education records due to disasters என்பதை கிளிக் செய்யவும்.
  • படிவத்தில் உங்கள் தகவல்களை நிரப்பி Proceed கொடுக்கவும்.

TN Job “FB  Group” Join Now

  • உங்கள் CAN எண்ணை கொடுக்க வேண்டும். இல்லாதவர்கள் புதிதாக உருவாக்க வேண்டும்.
  • பிறகு உங்களது புகைப்படம் மற்றும் இருப்பிட சான்றை ஸ்கேன் செய்து Upload செய்ய வேண்டும்.
  • இணைய வங்கி மூலம் சான்றிதலுக்கான கட்டம் செலுத்த வேண்டும்.
  • அதிகாரிகள் உங்கள் விவரங்களை சரிபார்த்த பிறகு உங்கள் மொபைல் எண்ணிற்கு குறுந்தகவல் வந்து சேரும். அதன் பிறகு தொலைந்ததற்கான சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. வணக்கம். உங்கள் இணையதள பக்கத்தைப் பாா்த்து, தொலைந்துபோன எனது பள்ளி சான்றிதழ் பெற நானே முயற்சி செய்தேன். ரெவென்யு பக்கம் வரை சென்று, சா்டிபிகெட் மிஸ்ஸிங் காலம் சென்று, அதிலுள்ள படிவத்தை நிரப்பும்போது பெயா், பாலினம் பிறந்த தேதி ஐ அடுத்து relationship என்ற ஒரு காலம் வருகிறது. அதில் 3 கேள்விகள் தந்தை, தாய், காப்பாளா் உள்ளது. இதில் நான் எதை தோ்வு செய்வது. காரணம் விண்ணப்பதாரரே நான்தானே

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!