தமிழகத்தில் 15 நாட்களில் புதிய ரேஷன் கார்டு பெறுவது எப்படி? – ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்!

0
தமிழகத்தில் 15 நாட்களில் புதிய ரேஷன் கார்டு பெறுவது எப்படி? - ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்!
தமிழகத்தில் 15 நாட்களில் புதிய ரேஷன் கார்டு பெறுவது எப்படி? - ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்!
தமிழகத்தில் 15 நாட்களில் புதிய ரேஷன் கார்டு பெறுவது எப்படி? – ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்!

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு ஆன்லைன் வாயிலாக எளிதாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் 15 நாட்களில் ரேஷன் கார்டு பெற முடியும். அதற்கான எளிய வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

ரேஷன் கார்டு:

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் மாதம் ரேஷன் அட்டைதாரர்கள் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மலிவு விலையில் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் பொது முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ரேஷன் கடைகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூபாய் 4,000 வழங்கப்படும் மேலும் மாதந்தோறும் குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கபட்டது. இதனையடுத்து புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

விரைவில் தொடங்க இருக்கும் “பாரதி கண்ணம்மா” சீசன் 2 – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!

இந்த நிலையில் ஆன்லைன் மூலமாக புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பழைய ரேஷன் கார்டில் உள்ள பெயரை நீக்குதல் புதிய உறுப்பினர்களின் பெயர்களை சேர்த்தல் போன்ற வேலைகளையும் ஆன்லைன் மூலமாவே செய்யலாம். குழந்தைகளின் பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க ஆதார் அட்டை அவசியமாகும். ஆக குழந்தைகளுக்கும் ஆதார் கார்டினை பெற்றுக் கொண்டு அதன் பிறகு புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.

நீங்கள் ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது 15 முதல் 20 நாட்களில் ரேஷன் கார்டை பெறலாம்.

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் முறைகள்:

  • முதலில் https://tnpds.gov.in/ என்ற இணையதளத்தில் அதில் மின்னணு அட்டை சேவைகள் என்பதன் கீழ், மின்னணு அட்டை விண்ணப்பிக்க என்பதை கிளிக் செய்யவும்.
  • அதில் புதிய அட்டைக்கான விண்ணப்பம் என்பதை கிளிக் செய்து Name of family head என்ற பாக்ஸின் கீழ், ஆங்கிலத்திலும், தமிழிலும் பெயரை சரியாக பதிவிட வேண்டும்.
  • அதன் பிறகு மற்ற விவரங்களையும் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். அடுத்ததாக குடும்ப தலைவர் புகைப்படம் என்ற இடத்தில் 5MB அளவில் உள்ள புகைப்படத்தினை பதிவேற்ற வேண்டும்.
  • மேலும் இருப்பிட சான்றிதழ் என்ற இடத்தில் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • இறுதியாக குடும்ப உறுப்பினர்கள் பெயர்களை சேர்ந்து உங்களது மின்னணு அட்டை விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்பிக்கப்பட்டது என்ற குறுந்செய்தி உங்களுக்கு கிடைக்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!