ஆதார் மூலம் அதிகரிக்கும் மோசடிகள்.. UIDAIன் புதிய அப்டேட் – எப்படி மாற்றுவது ?

0
ஆதார் மூலம் அதிகரிக்கும் மோசடிகள்.. UIDAIன் புதிய அப்டேட் - எப்படி மாற்றுவது ?
ஆதார் மூலம் அதிகரிக்கும் மோசடிகள்.. UIDAIன் புதிய அப்டேட் - எப்படி மாற்றுவது ?
ஆதார் மூலம் அதிகரிக்கும் மோசடிகள்.. UIDAIன் புதிய அப்டேட் – எப்படி மாற்றுவது ?

இந்திய மக்களுக்கு தேவையான அடிப்படை ஆவணமான ஆதார் அட்டை மூலம் செய்யப்படும் மோசடிகளை தடுக்க, முகமூடி ஆதார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை:
  • இந்தியாவில் மக்களின் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் அட்டை அவசியம் ஆகும். ஆனால் அதன் தேவை அதிகரிக்க அதிகரிக்க அதன் மோசடிகளும் அதிகமாக நடைபெறுகிறது. இந்நிலையில் ஆதார் மூலம் நடைபெறும் மோசடிகளை தடுக்க UIDAI முகமூடி ஆதார் சேவையை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த புதிய வசதி உங்களுடைய ஆதார் விவரங்கள் திருடப்படும் அபாயத்தை குறைகிறது.
  • மேலும் முகமூடி ஆதார் என்பது தனியுரிமையை மேம்படுத்தவும் ஆதார் தகவலின் அபாயத்தைக் குறைக்கவும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) அறிமுகப்படுத்தப்பட்ட அம்சமாகும். இதில் ஆதார் எண்ணின் முதல் 8 இலக்கங்கள் மறைக்கப்படும், அதே சமயம் கடைசி 4 இலக்கங்கள் மட்டுமே தெரியும். அதே போல உங்களின் பெயர், படம், மற்றும் QR கோடு போன்ற முக்கிய விவரங்கள் தெரியும். இதனை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து எளிதாக பதிவிறக்கம் செய்யலாம்.

நாளை (டிச.06) பள்ளிகளுக்கு விடுமுறை – கோரிக்கையை ஏற்குமா அரசு???

பதிவிறக்கம் வழிமுறைகள்:
  1. myaadhaar.uidai.gov.in இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  2. அதில் ஆதார் எண் அல்லது பதிவு ஐடியை உள்ளிட்டு, கேப்ட்சாவை நிரப்பி, ‘ஓடிபி அனுப்பு’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  3. பின் சேவைகள் பிரிவில் இருந்து பதிவிறக்க ஆதார் என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  4. அதில் முகமூடி அணிந்த பாத்திரம் வேண்டுமா? விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  5. பின் பதிவிறக்கம் என்பதைக் கிளிக் செய்ய, முகமூடி ஆதார் PDFஆக பதிவிறக்கம் செய்யப்படும்.
  6. ஆதார் அட்டையைத் திறக்க உங்களுக்கு கடவுச்சொல் தேவை இதற்கு நீங்கள் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும். கடவுச்சொல் – உங்கள் பெயரின் முதல் நான்கு எழுத்துக்கள் (ஆதாரில்) பெரிய எழுத்துக்களில் மற்றும் உங்கள் பிறந்த ஆண்டு YYYY.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!