TNPSC 5000+ காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? குரூப் 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு!

0
TNPSC 5000+ காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? குரூப் 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு!
TNPSC 5000+ காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? குரூப் 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு!
TNPSC 5000+ காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? குரூப் 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு!

TNPSC குரூப் 2, 2A தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 23ம் தேதி வரை தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறைகளை இப்பதிவில் காண்போம்.

குரூப் தேர்வுகள்:

தமிழகத்தில் அரசு துறையில் வணிக வரி அதிகாரி, நகராட்சி ஆணையர், உதவிப் பிரிவு அலுவலர், வேளாண்மை துறை, துறை கணக்காளர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், தொழில்துறை ஆணையர் மற்றும், வணிகம், மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவை உள்ளிட்ட 33 வகை பதவிகளுக்கு நடத்தப்படும் குரூப் 2, 2A தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த மாதம் 23ம் தேதி வெளியானது. அதில் குரூப் 2 தேர்வின் கீழ் 5831 காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் அவை தேர்வின் தகுதியானவர்களை கொண்டு நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மாநிலத்தில் மார்ச் 7ஆம் தேதி சம்பளத்துடன் விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!

இந்த தேர்வை எழுத விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இத்தேர்வுக்கு கடந்த மாதம் 23ம் முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்ப பதிவுகள் நடைபெற்று வருகிறது. மார்ச் மாதம் 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க தேர்வரின் புகைப்படம், கல்வி சான்றிதழ், தேர்வரின் கையொப்பம், தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் போன்ற ஆவணங்கள் அவசியமாகும்.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் புது வரவு – முல்லை கதாபாத்திரத்தில் இனி இவரா?

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறைகள்:

  • TNPSC-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் one time registration என்ற பகுதியை கிளிக் செய்து கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்து 150 ரூபாய் கட்டணம் செலுத்தி user id மற்றும் password set செய்யவும்.
  • அடுத்ததாக TNPSC முகப்பு பக்கத்தில் apply online என்பதில் உங்களின் OTR கணக்கின் ஐடி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
  • அதில் ஓபன் ஆகும் பக்கத்தில் குரூப் 2, 2A என்பதை கிளிக் செய்து அதில் வரும் ஒவ்வொரு படிநிலைகளை கவனமாக நிரப்ப வேண்டும்.
  • அடுத்த பக்கத்தில் புகைப்படம், போட்டோ போன்றவைகளை பதிவேற்றம் செய்ய வேண்டும். Applicant details. இதில் one time registration-ல் நீங்கள் கொடுத்த விவரங்கள் இருக்கும். அதனை சரிபார்த்து விட்டு தனிப்பட்ட விவரங்களுக்கு செல்லவும்.

மாநிலத்தில் மார்ச் 7ஆம் தேதி சம்பளத்துடன் விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!

  • அதில் special category certificate details, educational details இருக்கும் அதனை பூர்த்தி செய்து சான்றிதழ்களையும் பதிவேற்ற வேண்டும்.
  • அடுத்த பக்கத்தில் தமிழ் வழியில் பயின்ற விவரம் பள்ளி, கல்லூரியின் பெயர்கள் சான்றிதழ் பெற்ற தேதி என அனைத்தும் கேட்கப்படும். தமிழ் வழியில் படித்ததற்கான இட ஒதுக்கீடு போன்ற விவரங்களை நிரப்ப வேண்டும்.
  • இறுதியாக preview பகுதி ஓபன் ஆகும் அதில் நீங்கள் கொடுத்த முழு விவரங்களையும் சரிபார்த்து Terms and Conditions அனைத்தையும் படித்து விட்டு SAVE கொடுக்கவும்.
  • டெபிட் கார்டு/கிரெடிட் கார்டு/நெட் பேங்கிங் மூலம் தேர்வுக்கான விண்ணப்ப கட்டணத்தை செலுத்தவும்.
  • மேற்கண்ட நடைமுறைகளுக்கு பிறகு எதிர்கால தேவைக்காக பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!