குழந்தைகளுக்கான ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ!

0
குழந்தைகளுக்கான ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ!
குழந்தைகளுக்கான ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ!
குழந்தைகளுக்கான ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ!

தற்போது புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு மத்திய அரசின் அடையாள ஆவணமான ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. இதனை பெறுவதற்கு எப்படி விண்ணப்பம் செய்வது, தேவையான ஆவணங்கள் என்னென்ன என்ற விவரங்களை இப்பதிவில் காணலாம்.

ஆதார் அட்டை:

மத்திய அரசு அறிமுகப்படுத்திய முக்கிய ஆவணமான ஆதார் அட்டைகள் தற்போது அனைத்து வகையான செயல்பாடுகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரையுள்ள அனைவருக்கும் இந்த ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. ஏனென்றால் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கும் நடைமுறைகளின் போது இந்த ஆதார் எண் அவசியமாகிறது. அதற்காக புதிதாகப் பிறந்த குழந்தைக்கும் ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. இந்த அட்டையைப் பெறுவதற்கான வழிமுறைகள் இப்போது ஆன்லைன் மூலம் எளிதாக்கப்பட்டிருக்கிறது.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் இப்போது பிறந்த குழந்தைகளுக்காக பால் ஆதார் அட்டை மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அட்டைகளில் கைரேகைகள் மற்றும் கருவிழி ஸ்கேன் போன்ற பயோமெட்ரிக் தகவல்கள் குழந்தையின் ஆதார் தரவுகளில் சேர்க்கப்படவில்லை என்றாலும் ஒரு குழந்தை ஐந்து வயதை அடைந்தவுடன் அதை புதுப்பிக்க வேண்டும். இப்போது பிறந்த குழந்தையின் ஆதார் அட்டைகளை பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள். இப்போது புதிய ஆதார் அட்டையை பெற்றுக்கொள்ள குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் பெற்றோரில் ஒருவரின் ஆதார் அட்டை தேவைப்படும்.

குழந்தைகளுக்கான ஆதாரை ஆன்லைனில் பதிவு செய்ய:
  • முதலில் UIDAIன்  https://uidai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை திறக்கவும்.
  • ஆதார் கார்டு பதிவு பக்கத்திற்கு சென்று அதை கிளிக் செய்யவும்.
  • அதில் குழந்தையின் பெயர், பெற்றோரின் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற தேவையான அனைத்து தகவல்களையும் நிரப்பவும்.
  • தொடந்து சந்திப்பு சரிசெய்தல் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • ஆதார் அட்டைக்கு பதிவு செய்வதற்கான தேதியை அமைக்கவும்.
  • விண்ணப்பதாரர் அருகிலுள்ள பதிவு மையத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் பதிவு செயல்முறையைத் தொடரலாம்.

  • இப்போது அருகில் உள்ள ஆதார் அட்டை பதிவு மையத்தைப் பார்வையிடவும்.
  • அங்கு பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டையுடன் படிவத்தை சமர்ப்பிக்கவும்.
  • இதனுடன் பெற்றோரின் ஆதார் அட்டை தகவல் மற்றும் மொபைல் எண்ணை வழங்க வேண்டும்.
  • இப்போது சரிபார்ப்பு செயல்முறையை தொடர்ந்து, குழந்தையின் புகைப்படம் எடுக்கப்படும்.
  • குழந்தைக்கு ஐந்து வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயது இருந்தால் ஒரு புகைப்படம் மற்றும் கருவிழி ஸ்கேன் மற்றும் கைரேகை போன்ற பயோமெட்ரிக் தரவு எடுக்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!