ரேஷன் அட்டைகளில் புதிய குடும்ப உறுப்பினர் சேர்ப்பு – ஆன்லைனில் செய்வது எப்படி?
நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு முக்கிய ஆவணங்களில் ஒன்றான ரேஷன் அட்டைகளில் திருத்தம் என்றாலோ அல்லது பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்றவற்றை எளிய முறையில் எவ்வாறு செய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
ரேஷன் அட்டை திருத்தம்:
நாடு முழுவதும் ஆதார் அட்டை, பான் கார்டு போல முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக ரேஷன் அட்டை உள்ளது. இந்த அட்டை மூலமாக மக்கள் மலிவு விலையில் பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம். குறிப்பாக மத்திய அரசு தெரிவித்துள்ள ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் மூலமாக மக்கள் நாடு முழுவதும் எங்கிருந்தாலும் பலனாக இருக்கும்.
ஆதார் கார்டில் முகவரியை ஆன்லைனில் மாற்றும் எளிய வழிமுறைகள் இதோ!
மக்கள் நாடு முழுவதும் எந்த மாநிலத்தில் இருந்தாலும் இந்த திட்டம் மூலமாக பொருள்களை பெற்று கொள்ளலாம். இருந்த போதிலும் ரேஷன் அட்டை ஏதேனும் திருத்தம் என்றாலோ அல்லது பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்றவற்றை செய்வது கடினமான ஒன்றாக உள்ளது. சுலபமாக வீட்டிலிருந்தே ரேஷன் அட்டை திருத்தும் செய்வது எவ்வாறு என்பதை பார்க்கலாம்.
TN Job “FB
Group” Join Now
புதிதாக குடும்ப உறுப்பினர் பெயர் சேர்க்க வேண்டுமானால், குழந்தையின் பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் ஆதார் கார்டு. குழந்தைக்கு ஆதார் கார்டு இருப்பின் குழந்தையில் ஆதார் கார்டு ஆகியவற்றை வழங்க வேண்டும். புதியதாக திருமணமான பெண்ணாக இருப்பின், திருமண சான்றிதழ், அவரின் ஆதார் அட்டை, பெற்றோரின் குடும்ப அட்டை, பெற்றோர் அட்டையில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட சான்று போன்றவற்றை வழங்க வேண்டும்.
மாற்றம் செய்ய தேவைப்படும் ஆவணங்கள்:
- ஆதார் கார்டு
- பேங்க் பாஸ்புக்
- பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
- மின்சார கட்டண ரசீது/ தண்ணீர் வரி/ டெலிபோன் பில்
- வருமான சான்று
- Receipt of Ration card center Photo 1
- ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களின் போட்டோ 1
ஆன்லைன் மூலமாக எவ்வாறு மாற்றுவது?
- முதலில் https://www.tnpds.gov.in/ என்ற இணையதளம் செல்ல வேண்டும். அதில் மின்னணு அட்டை தொடர்பான சேவைகள் என்று இருக்கும்
- அதன் பின்னர் உறுப்பினர் பெயர் சேர்க்க அல்லது நீக்க என சேவைகளுக்கான ஆப்சன் இருக்கும்
- அதில் உறுப்பினரை சேர்க்க என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் உங்களது மொபைல் எண்ணை கொடுக்க வேண்டும். பின்னர் கேப்ட்சா குறியீட்டினை கொடுத்து பதிவு செய்ய வேண்டும்.
- பின்னர் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒடிபி வரும். அது மற்றொரு பக்கத்திற்கு செல்லும். அதில் ஏற்கனவே உங்களது குடும்ப உறுப்பினர்கள், அவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும்
- அதன் கீழே புதிய குடும்ப உறுப்பினர் சேர்க்கை என்ற Option இருக்கும் அதனை கிளிக் செய்ய வேண்டும்.
- அதில் Name என்ற இடத்தில் கேப்பிட்டல் லெட்டரில் ஆங்கிலத்தில் பெயரை கொடுக்க வேண்டும். அதன் பிறகு பெயர் என்ற இடத்தில் தமிழில் பெயரை கொடுக்க வேண்டும்.
- அதன் பிறகு பாலினம் என்பதில் ஆணா/ பெண்ணா என்று கொடுக்க வேண்டும். பிறகு பிறந்த தேதி, உறவு முறை என்ற பாக்சில் கொடுக்க வேண்டும்.
- பின்னர் ஆதார் எண்ணை கொடுக்க வேண்டும். பிறகு ஆதாரினை பதிவேற்றம் செய்ய வேண்டும். (1 MB இருக்க வேண்டும்).
- இறுதியாக உறுப்பினரை சேர்க்க என்ற Option கொடுக்க வேண்டும்.
- நீங்கள் கொடுத்த விவரங்களை சரிபார்த்த பின்னர், உறுதிபடுத்தல் என்ற பாக்ஸினை கிளிக் செய்ய வேண்டும். சரியாக அனைத்தும் செய்து முடித்த பின்னர் குறிப்பு எண் என ஒரு நம்பர் வரும். இதனை ஸ்கீரி ஷாட் அல்லது பிடிஎஃப் ஆக எடுத்துக் கொள்ள வேண்டும்.
- https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்தை திறந்து நீங்கள் ஸ்கீரி ஷாட் எடுத்து வைத்துள்ள எண்ணை கொடுக்க வேண்டும். மின்னணு அட்டை தொடர்பான சேவைகள் என்ற , அட்டை தொடர்பான சேவை நிலையை தெரிந்து கொள்ளலாம்.
புது கார்டு வாங்க என்ன செய்வது
New card