ஆதார் கார்டில் முகவரியை ஆன்லைனில் மாற்றும் எளிய வழிமுறைகள் இதோ!

1
ஆதார் கார்டில் முகவரியை ஆன்லைனில் மாற்றும் எளிய வழிமுறைகள் இதோ!
ஆதார் கார்டில் முகவரியை ஆன்லைனில் மாற்றும் எளிய வழிமுறைகள் இதோ!
ஆதார் கார்டில் முகவரியை ஆன்லைனில் மாற்றும் எளிய வழிமுறைகள் இதோ!

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பாலினம் மற்றும் பிறந்த தேதி போன்ற தனிப்பட்ட விவரங்களை சரிசெய்வது எவ்வாறு என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

ஆதார் அட்டை திருத்தம்:

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பாலினம் மற்றும் பிறந்த தேதி போன்ற தனிப்பட்ட விவரங்களை சரிசெய்ய, ஒருவர் தங்கள் மொபைல் எண்ணை ஆதார் ஐடியில் பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் ஒரு முறை கடவுச்சொல் (OTP) மூலமாக எளிதாக ஆதார் அட்டை விவரங்களை மாற்றி கொள்ளலாம். இந்திய தனித்துவமான அடையாள ஆணையம் (UDAI) இது போன்ற மாற்றங்களை செய்ய உதவியாக உள்ளது.

தமிழகத்தில் வியாபாரிகளுக்கு ரூ.5000 நிவாரணம் – அரசுக்கு கோரிக்கை!

ஆதார் அட்டை விவரங்களை புதுப்பிக்கும்போது, பெயர், முகவரி, பாலினம் மற்றும் பிறந்த தேதி போன்ற அடையாளச் சான்றுகளில் ஒரு நபர் மாற்றங்களைச் செய்து அவர்களின் முக்கிய தகவல்களைப் புதுப்பிக்க முடியும். ஆன்லைன் மூலமாக எவ்வாறு ஆதார் தகவல்களை மாற்றம் செய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

பின்வரும் புள்ளிவிவர தரவுகளை ஆன்லைனில் புதுப்பிக்க முடியும்:

  • பெயர்
  • பிறந்த தேதி
  • பாலினம்
  • முகவரி
  • மொழி

ஆதார் விவரங்களில் மொபைல் எண்ணில் மாற்றங்களை ஆன்லைனில் செய்ய முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்களின் மொபைலை ஆதார் அட்டையுடன் இணைக்க, அல்லது அதற்கான புதுப்பிப்புகளைச் செய்ய, ஒருவர் தங்களது அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்தைப் பார்வையிட வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

ஆன்லைனில் ஆதார் விவரங்களை எவ்வாறு புதுப்பிப்பது?

  1. இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UDAI) அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை திறக்க வேண்டும். ‘Update Aadhaar’ optionயை கிளிக் செய்ய வேண்டும்.
  2. பின்வரும் பக்கத்தில் உள்ள ‘உங்கள் ஆதாரில் உள்ள புதுப்பிப்பு முகவரி’ இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.
  3. அதன் பின்னர் ‘Proceed to Update Aadhaar’ கிளிக் செய்ய வேண்டும். அதன் மூலமாக நீங்கள் நேரடியாக செல்லாமல் ஆதார் விவரங்களை புதுப்பிக்க முடியும்.
  4. ஆதார் எண் மற்றும் கேப்ட்சா உள்ளிட்ட தொடர்புடைய சான்றுகளை ஆன்லைனில் உள்ளிடவும். ‘Send OTP’ பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.
  5. உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் ஆறு இலக்க OTP வரும். அதன் பின்னர் புதிய விவரங்களை புதுப்பிக்க வேண்டும்.
  6. உங்கள் பெயர், முகவரி, பிறந்த தேதி அல்லது மொழி தேவைப்படும் இடங்களில் பொருத்தமான மாற்றங்களைச் செய்து, ‘தொடரவும்’ என்பதைக் கிளிக் செய்து தரவைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  7. இப்போது நீங்கள் இணையதளத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து தகவல்களை பதிவு செய்ய வேண்டும். அதற்கான ஆதாரங்களை பதிவு செய்ய வேண்டும். பெயர் மாற்றம் செய்ய: அடையாளச் சான்று (POI) இன் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் சமர்ப்பிக்க வேண்டும். பிறந்த தேதி மாற்றம் செய்ய: பிறந்த தேதி சான்றின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் சமர்ப்பிக்க வேண்டும். பாலினத்தை மாற்றம் செய்ய: மொபைல் / முக அங்கீகாரம் வழியாக OTP அங்கீகாரம் பெற வேண்டும். முகவரி மாற்றம் செய்ய: முகவரி சான்று (POA) இன் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் வழங்கப்பட வேண்டும்.
  8. இணையதளத்தில் செய்யப்பட்ட மாற்றங்களைச் சமர்ப்பித்து மதிப்பாய்வு செய்ய வேண்டும்.
  9. இந்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதார் அட்டையில் பதிவுசெய்யப்பட்ட ஒரு மொபைல் எண் தேவைப்படுகிறது. இதற்கு இ-சேவை மையத்தை அணுக வேண்டும்.
  10. மேலும் உங்கள் ஆதார் அட்டை புதுப்பிப்பு செயல்முறையின் நிலையை சரிபார்க்க உதவும் புதுப்பிப்பு கோரிக்கை எண் (யுஆர்என்) உங்களுக்கு வழங்கப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. 3days before I was booked in one mobile for Nefone Mobil, model:Q20 ultra 5g , colour: blue ,placed SH1862281184,But order tracking details is not there, please kindly send to our money,
    Kindly your website address and customer care number both of you not working, anybody not booked for this website

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!