தமிழக அரசு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்கள் பணியிடங்கள் – அமைச்சர் வெளியிட்ட ஷாக் அறிவிப்பு!

0
தமிழக அரசு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்கள் பணியிடங்கள் - அமைச்சர் வெளியிட்ட ஷாக் அறிவிப்பு!
தமிழக அரசு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்கள் பணியிடங்கள் – அமைச்சர் வெளியிட்ட ஷாக் அறிவிப்பு!

தமிழக அரசு கல்லூரிகளில் கடந்த 2019ம் ஆண்டு 2,331 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் பணி செய்து வரும் இந்த நேரத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால் கவுரவ விரிவுரையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கவுரவ விரிவுரையாளர்:

தமிழக அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் கணினி வழியில் நடைபெற்றது. சுமார் 2.30 லட்சம் பேர் இத்தேர்வை எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதை அடுத்து தரவரிசை பட்டியல் வெளியிடபட்டு தகுதியுடையவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். தற்போது பணி நியமனங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து இந்த வாரம் TET முதல் தாள் தேர்வுக்கான அனுமதி சீட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர் தகுதித்தேர்வு கணினி வாயிலாக நடத்தப்படவுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறையை தொடர்ந்து உயர்கல்வித்துறையில் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் நியமனம் குறித்து அமைச்சர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு நேர்காணல் மூலம் 2,331 கவுரவ விரிவுரையாளர்கள் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த பணியிடங்களுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்தனர்.

வாட்ஸ்அப்பில் நடக்கும் புது வகையான மோசடிகள் – அரசு எச்சரிக்கை!

Exams Daily Mobile App Download

இவர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். பிறகு சான்றிதழ் சரிபார்ப்பும் நடத்தப்பட்டது. இந்த நிலையில் விண்ணப்பித்தவர்கள் எழுத்து தேர்வுக்கு தயாராக இருங்கள் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இது கவுரவ விரிவுரையாளர்களாகளாக பணியாற்றி வருவோர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் பணி அனுபவ முறையின் கீழ் விரிவுரையாளர்களை நியமிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கவுரவ விரிவுரையாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.30,000 வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!