தமிழக பள்ளி மாணவர்களுக்கு அக். 9 வரை விடுமுறை அறிவிப்பு – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

0
தமிழக பள்ளி மாணவர்களுக்கு அக். 9 வரை விடுமுறை அறிவிப்பு - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு அக். 9 வரை விடுமுறை அறிவிப்பு - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு அக். 9 வரை விடுமுறை அறிவிப்பு – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தற்போது காலாண்டு தேர்வு நடந்து வரும் நிலையில், 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக். 12 ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது வெளியான அறிவிப்பின் படி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலாண்டு விடுமுறை:

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் இந்த ஆண்டு பொது காலாண்டு தேர்வு கிடையாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அந்தந்த பள்ளிகள் காலாண்டு தேர்வு அட்டவணையை தயார் செய்து செப்.30 ஆம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு காலாண்டு தேர்வு விடுமுறை குறித்த அறிவிப்பையும் அரசு வெளியிட்டது. அதன் படி 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக். 12 ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

மேலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக். 5 ஆம் தேதி வரை விடுமுறை விட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த அறிவிப்பில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன் படி 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்.12 ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டது போல தற்போது 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை நீட்டிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக். 9 ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக தொடக்கல்வி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் முதற்கட்ட பயிற்சி திட்டம் அளிக்கப்பட உள்ளதால் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட கோரிக்கை… DA நிலுவை தொகை எப்போது?

Exams Daily Mobile App Download

அது மட்டுமில்லாமல் தற்போது பருவநிலை மாற்றம் காரணமாக பல மாநிலங்களில் அதிகமான குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். அதனால் தற்போது விடுமுறை அறிவிப்பால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நிம்மதியில் இருக்கின்றனர். மேலும் தமிழக பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கு அக். 13 ஆம் தேதியும், 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக். 10 ஆம் தேதி முதல் வழக்கம் போல வகுப்புகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!