காரன்வாலிஸ் பிரபு – TNPSC வரலாறு பாடக்குறிப்புகள்

0

காரன்வாலிஸ் பிரபு

TNPSC, UPSC பாடக்குறிப்புகள்- கிளிக் செய்யவும் 

இந்திய வரலாறு பாடக்குறிப்புகள்-கிளிக் செய்யவும்

தலைமை ஆளுநர் :

 • கி.பி.1786 ஆம் ஆண்டு இந்தியாவின் தலைமை ஆளுநராக காரன் வாலிஸ் பிரபு நியமிக்க பட்டார்.

நிலவரித் திட்டம்:

 • ஒரு குறிப்பிட்ட தொகையை பணமாக கருவூலத்தில் செலுத்த வேண்டும் என்ற நிலவரித்திட்டத்தை அறிமுகப் படுத்தினர் .

 நிர்வாக சீர்திருத்தம்:

 • காரன் வாலிஸ் பிரபு “இந்திய குடிமையியல் தந்தை” என அழைக்கப் பட்டார்.
 • கம்பெனி ஊழியர்கள் தனிப்பட்ட முறையில் வியாபாரம் செய்வதைத் தடை செய்தார்.
 • அனைத்து உயர் பதவி ஆங்கிலேயர்களுக்கு ஒதுக்கப்பட்டது.
 • இந்தியர்கள் துணை நிலை அலுவலர்கள் பதவிகளுக்கு மட்டுமே தேர்வு செய்யப் பட்டனர்.

காவல் துறைச் சீர்திருத்தம் :

 • கி.பி. 1791 ஆம் ஆண்டு காவல்துறை கல்கத்தாவில் காவல்துறை ஆணையர் நியமனம் உருவாக்கப்பட்டது.
 • இந்தியர்களை உயர்பதவியில் நியமிக்கப்படவில்லை.

நீதித்துறை:

 • நீதிபணியிலிருந்து மாவட்ட ஆட்சியர் விடுவிக்கப்பட்டு வருவாய்த்துறை பொறுப்பு மட்டும் ஒப்படைக்கப்பட்டது

மாகாண நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்ட இடங்கள்:

 • டாக்கா
 • கல்கத்தா
 • முர்ஷிதாபாத்
 • பாட்னா

காரன்வாலிஸ் சட்டத் தொகுப்பினை கி.பி.1793 ஆம் ஆண்டு சர்ஜார்ஜ் பரலோ    என்பவர் தொகுத்து வெளியிட்டார்.

வருவாய்த்துறை:

 • 1787 இல் வங்காளம் பல பிரிவாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவும் ஒரு ஆட்சியரின் கீழ் நிர்வகிக்கப்பட்டது.
 • காரன் வாலிஸ் வருவாய்த்துறையை உருவாக்கி ஆட்சியர்களின் செயல்பாட்டை மேற்பார்வை செய்தார்.

வணிக சீர்திருத்தம்:

 • காரன்வாலிஸ் ஆங்கிலயேர்களை இந்திய வியாபாரிகளோடு நேரிடையாக பொருள்களை வாங்கும் அல்லது விற்கும் முறையினை அறிமுகப்படுத்தினார்.
 • ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் வியாபாரம் பெருகியது.

திப்புசுல்தான் :

 • திப்புசுல்தான் கி.பி.1753 ஆம் ஆண்டு ஹைதர் அலியின் மகனாக பிறந்தார்.
 • இந்திய நாட்டினை பாதுகாக்க வலிமை மிகுந்த கோட்டைகளை உருவாக்கியவர்.
 • திப்பு சுல்தான் ஆங்கிலேயர்களை வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கோதோடு ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர்  தொடுத்து அதில்  தோல்வியுற்றார்.
 • கி.பி.1792 ஆம் ஆண்டு கையொப்பமான சீரங்கப்பட்டின அமைதி ஒப்பந்தம் மூன்றாவது மைசூர் போர் முடிவுக்கு வந்தது.

துணைப்படைத்திட்டம்:

 • காரன்வாலிஸ் பிரபு தொடர்ந்து வெலெஸ்லி பிரபு கவர்னர் ஜெனரலாக பதவியேற்றார்
 • இவர் துணைப்படைத்திட்டம் என்ற சுதேச சாம்ராஜ்யங்களை ஆங்கில அரசாட்சியின் கீழ் கொண்டு வர எண்ணினார்.

நான்காவது ஆங்கில மைசூர் போர்:

 • திப்பு சுல்தான் துணை படை திட்டத்தை ஏற்க மறுத்து ஆங்கிலேயர்களுடன் கி.பி.1799 ஆம் ஆண்டு மாளவல்லி எனும் இடத்தில் போர் தொடுத்த போது திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்டார்.
 • மே 4 ஆம் நாள் ஸ்ரீரங்கப்பட்டினத்தை காக்க முயன்ற போது கொல்லப்பட்டார்.

   PDF பதிவிறக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!