ஜூன் 14 வரை காலை 9 மணிமுதல் கடைகள் திறக்க அனுமதி – மாநில அரசு அறிவிப்பு!

1
ஜூன் 14 வரை காலை 9 மணிமுதல் கடைகள் திறக்க அனுமதி - மாநில அரசு அறிவிப்பு!
ஜூன் 14 வரை காலை 9 மணிமுதல் கடைகள் திறக்க அனுமதி - மாநில அரசு அறிவிப்பு!
ஜூன் 14 வரை காலை 9 மணிமுதல் கடைகள் திறக்க அனுமதி – மாநில அரசு அறிவிப்பு!

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஏற்கனவே அமலில் உள்ள கொரோனா ஊரடங்கு உத்தரவு ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டு உள்ளது. ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கு உத்தரவு:

இமாச்சலப் பிரதேச மாநில அரசு மாநிலம் தழுவிய கொரோனா ஊரடங்கு உத்தரவு ஜூன் 14 காலை 6 மணி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்து உள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஒரு முடிவு வந்தது. ஜூன் 14 வரை பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன.

வழிகாட்டு நெறிமுறைகள்:

  • அனைத்து கடைகளும், பிற நிறுவனங்களும் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஐந்து மணி நேரம் திறந்திருக்கும்.
  • சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பால், ரொட்டி, மருந்து கடைகள் வழக்கம் போல் திறந்திருக்கும்.
  • அரசாங்க அலுவலகங்களும் 30 சதவிகித பணியாளர்களுடன் செயல்படும்.
  • மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும்.

தமிழகத்தில் இறப்பு & வாரிசு சான்றிதழ் வழங்கல் – தலைமை செயலர் முக்கிய உத்தரவு!

  • இதேபோல், மறுஉத்தரவு வரும் வரை பொது போக்குவரத்தும் நிறுத்தப்படும்.
  • குணமடைந்த பின்னர் மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட கோவிட் -19 நோயாளிகளுக்கு தொலைபேசி வாயிளாக ஆலோசனை வழங்குவது தொடர்பாக அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
  • மேலும் தடுப்பூசிகளை தயாரிப்பாளர்களிடமிருந்து நேரடியாக வாங்குவதற்கான பரிந்துரைகளை அரசாங்கம் ஆராயும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. Please tea @ coffee shop ya open panna sollunga …milk la rembo waste akuthu kadai mrng 9 la iruthu evening 5 vera irutha kuda pothum…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!