மாதம் ரூ. 50,000க்கு மேல் பென்சன் கிடைக்கும் திட்டம் – முழு விவரம் இதோ !

0
மாதம் ரூ. 50,000க்கு மேல் பென்சன் கிடைக்கும் திட்டம் - முழு விவரம் இதோ !
மாதம் ரூ. 50,000க்கு மேல் பென்சன் கிடைக்கும் திட்டம் - முழு விவரம் இதோ !
மாதம் ரூ. 50,000க்கு மேல் பென்சன் கிடைக்கும் திட்டம் – முழு விவரம் இதோ !

தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் என்பது வழங்கப்படுவதில்லை. அரசு ஊழியர்களை போன்று தங்களுக்கும் ஓய்வூதியம் வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த ஓய்வூதிய திட்டத்தில் இணைவதால் ஓய்வூதியத்தை பெற முடியும். தற்போது இந்த ஓய்வூதிய திட்டத்தை பற்றி முழுமையாக பார்ப்போம்.

ஓய்வூதிய திட்டம்

கொரோனா காலத்தில் பொதுமக்கள் மிகவும் பொருளாதார ரீதியான பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்தனர். அதனால் தங்கள் பணத்தை பாதுகாப்பான சேமிப்பு திட்டத்தில் சேமிக்கத் தொடங்கினர். இதில் குறிப்பாக தேசிய ஓய்வூதிய திட்டத்தில் பெருமளவு இணைந்தனர். ஏனெனில் அரசு ஊழியர்களுக்கு பணி நிறைவடையும் போது வழங்கப்படும் ஓய்வூதியம் போல இந்த திட்டத்திலும் மாதந்தோறும் பென்ஷன் தொகையை பெற முடியும். இந்த திட்டம் 2004ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் அடுக்கு-1 என்ற ஓய்வூதியக் கணக்கு திட்டமும் மற்றும் அடுக்கு-2 என்ற தன்னார்வக் கணக்கு திட்டமும் என இரு வகையாக உள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 10% வரை வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இதில் 21 வயதுடைய நபர் ஆண்டுக்கு ரூ.4500 தொகையை 60 வயது வரை தொடர்ந்து செலுத்தி வர வேண்டும். அதாவது 39 ஆண்டுகளுக்கு ரூ.17 லட்சம் வரை முதலீடு செய்ய வேண்டும். முதிர்வு காலத்தின் முடிவில் 10% வட்டி கணக்கிடப்பட்டால் சேமிப்பு தொகை பல கோடி ரூபாயை தொட்டு விடும். இதையடுத்து தங்களின் ஓய்வூதிய காலத்தில் மாதந்தோறும் ரூ.51,848 வரை வழங்கப்படும். இந்த திட்டத்தில் ஆன்லைன் முறையில் மிகவும் சுலபமாக இணைந்து கொள்ளலாம்.

அரசு வேலைக்கு காத்திருப்போர் கவனத்திற்கு – இனி ஆன்லைன் தேர்வு மட்டுமே! பாடத்திட்டம் உருவாக்க நிபுணர் குழு!

தற்போது தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இணைவதற்கான வழிமுறைகள் பற்றி விரிவாக பார்ப்போம்.

1. தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இணைய விருப்பம் உள்ளவர்கள் https://enps.nsdl.com/eNPS/NationalPensionSystem.html என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

2. இப்போது new login என்பதை கிளிக் செய்து அதில் கேட்கப்படும் தங்களின் விவரங்களை கொடுக்க வேண்டும்.

3. இதையடுத்து பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP எண் அனுப்பப்படும். இதனை உள்ளிட்டு அதன்பின் முதலீடுகளை செலுத்த தொடங்க வேண்டும்.

4. இறுதியாக தங்களுக்கு என்று நிரந்தர ஓய்வூதியக் கணக்கு எண் அதாவது PRN எண் உருவாக்கப்படும். அத்துடன் பணம் செலுத்தியதற்கான ரசீதும் வழங்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!