தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கம் – முழு விபரம் இதோ!

0
தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கம் - முழு விபரம் இதோ!
தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கம் - முழு விபரம் இதோ!
தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கம் – முழு விபரம் இதோ!

கேரளாவில் கொண்டாடப்படும் சிறப்பான பண்டிகைகளில் ஒன்றாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் கேரளாவிற்கு இயக்கப்பட உள்ளது. தற்போது எந்தெந்த இடங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது என விரிவாக பார்ப்போம்.

சிறப்பு ரயில்கள்

இந்தியாவில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் சுற்றுலா, இருப்பிடம், அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்கின்றனர். இதையடுத்து பண்டிகை காலங்களில் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகை கொண்டாட விரும்புவார்கள். அதனால் பயணிகளின் தேவைக்கேற்ப பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குவது வழக்கமாகும். அந்த வகையில் கேரளாவில் ஓணம் பண்டிகையானது அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் என மொத்தம் 10 நட்சத்திரங்கள் வரும் 10 நாட்களிலும் கொண்டாடப்படுகிறது.

அதன்படி வருகிற செப்டம்பர் 8ம் தேதி அன்று ஓணம் பண்டிகையின் முக்கிய தினமாக கொண்டாப்பட உள்ளது. அதனால் பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வருகிற 10ம் தேதி அன்று திருவனந்தபுரத்தில் இருந்து திருவனந்தபுரம் – ஹைதராபாத் இடையே எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு உள்ளிட்ட ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் எத்தனை? இயக்குநர் முக்கிய உத்தரவு!

இதனை தொடர்ந்து நாளை இரவு 11.30 மணி அளவில் சென்னை சென்ட்ரல் – எர்ணாகுளம் இடையேயான சிறப்பு ரயில் புறப்படும் என்றும் மறுமார்க்கத்தில் எர்ணாகுளத்திலிருந்து 9ம் தேதி மதியம் 2:20 மணிக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், ஆலுவா உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும். இதனை தொடர்ந்து வருகிற 10ம் தேதி அன்று காலை 8 மணி அளவில் திருநெல்வேலி – பெங்களூரு இடையேயான சிறப்பு ரயில் புறப்படும் என்றும் இந்த ரயில் பாலக்காடு, கோவை, சேலம் உள்ளிட்ட ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!