தமிழக அரசு பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் எத்தனை? இயக்குநர் முக்கிய உத்தரவு!

0
தமிழக அரசு பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் எத்தனை? இயக்குநர் முக்கிய உத்தரவு!
தமிழக அரசு பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் எத்தனை? இயக்குநர் முக்கிய உத்தரவு!
தமிழக அரசு பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் எத்தனை? இயக்குநர் முக்கிய உத்தரவு!

தமிழக அரசு பள்ளிகளில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை நடப்பு கல்வியாண்டில் அதிகரித்துள்ளது. இதனை நிரப்பும் பொருட்டு ஆசிரியர் தகுதித்தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் விவரங்களை அனுப்ப பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

ஆசிரியர் காலிப்பணியிடம்:

தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு ஆசிரியர்கள் இல்லை என்பதால் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் பள்ளிகளில் கற்றல் கற்பித்தலில் தொய்வு ஏற்பட்டது. இந்த நிலைமையை சமாளிக்க பள்ளிகல்வித்துறை ஆசிரியர் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய திட்டமிட்டது. இதனையடுத்து முதல் கட்டமாக அரசு மேல்நிலை பள்ளிகளில் உள்ள 2000க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தகுதித்தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது.

இந்த தேர்வின் முடிவுகள் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. தற்போது சான்றிதழ் பதிவேற்ற பணிகள் நடந்து வருகிறது. விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்த நிலையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி விண்ணப்பபதிவுகள் நடைபெற்றது. தற்போது விண்ணப்பதாரர்கள் தேர்வு தேதியை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

மத்திய அரசு ஓய்வுதாரர்களுக்கான ஹேப்பி நியூஸ் – “இந்த” வயதிற்கு மேல் கூடுதல் பென்ஷன்!

இந்த நிலையில் பள்ளிக் கல்வி இயக்குனரகம் அனுப்பிய சுற்றறிக்கையில் செப்டம்பர் 1ம் தேதி நிலவரப்படி தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர் நிலை-1 போன்ற காலிப்பணியிடங்கள் விவரங்களை அனுப்ப பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதனால் வரும் செப்டம்பர் 9ம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here