TCS & Infosys நிறுவனங்களில் 90,000+ பேருக்கு வேலைவாய்ப்பு – முழு விவரம் இதோ!

0
TCS & Infosys நிறுவனங்களில் 90,000+ பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் இதோ!
TCS & Infosys நிறுவனங்களில் 90,000+ பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் இதோ!
TCS & Infosys நிறுவனங்களில் 90,000+ பேருக்கு வேலைவாய்ப்பு – முழு விவரம் இதோ!

நடப்பு நிதியாண்டில் இன்போசிஸ் மற்றும் டிசிஎஸ் நிறுவனங்கள் சுமார் 90,000க்கும் மேற்பட்ட புதியவர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

IT வேலைவாய்ப்பு

இந்தியாவின் 2 பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களான இன்போசிஸ் மற்றும் டிசிஎஸ் ஆகியவை கடந்த ஆண்டில் 1 லட்சம் பேருக்கு மேல் வேலைவாய்ப்புகளை அளித்த கையோடு, இந்த ஆண்டும் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது. இது குறித்த அறிக்கைகளின்படி, இன்போசிஸ் மற்றும் டிசிஎஸ் நிறுவனங்கள் 2021- 22ம் நிதியாண்டில் முறையே 1,00,000 மற்றும் 85,000 புதியவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளன. இதை தொடர்ந்து இன்ஃபோசிஸ் நிறுவனம் 2023ம் நிதியாண்டில் சுமார் 50,000க்கும் மேற்பட்ட புதியவர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

அதே நேரத்தில், TCS நிறுவனம் சுமார் 40,000 நபர்களை புதிதாக பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. இது குறித்து இன்போசிஸ் நிறுவனத்தின் CEO நிலஞ்சன் ராய் கூறுகையில், ‘நாங்கள் கடந்த நிதியாண்டில் இந்தியா முழுவதும் மற்றும் உலகளவில் 85,000 புதியவர்களை பணியமர்த்தினோம். இந்த ஆண்டு குறைந்தபட்சம் 50,000 புதியவர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளோம்’ என்று கூறியுள்ளார். மறுபுறம், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் பணியமர்த்தல் வேகம் கடந்த நிதியாண்டில் இருந்ததைப் போலவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – பயிற்சி வகுப்புகள் அறிமுகம்!

அந்த வகையில் இந்நிறுவனம் இந்த ஆண்டு 40,000 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும், தேவைப்பட்டால் இதற்கு அதிகமான எண்ணிக்கையில் பணியமர்த்தல் நடவடிக்கை தொடரும் என்று டிசிஎஸ் தலைமை செயல் அதிகாரி என்ஜி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம், தனது 25X25 மாடலின் கீழ் ஊழியர்களை மீண்டுமாக அலுவலகத்திற்கு வரவழைத்து படிப்படியாக ஹைப்ரிட் வேலை மாதிரிக்கு மாற்றுவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த 25X25 மாடலின் கீழ், வரும் 2025ம் ஆண்டுக்குள் இந்த நிறுவனத்தின் 25 சதவீத ஊழியர்கள் அலுவலகத்தில் இருந்து வேலை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!