SBI, ICICI, HDFC Bank, Axis Bank, BOB வங்கிகளுக்கு WhatsAppயில் சேவைகள் – எளிய வழிமுறைகள் இதோ!

0
SBI, ICICI, HDFC Bank, Axis Bank, BOB வங்கிகளுக்கு WhatsAppயில் சேவைகள் - எளிய வழிமுறைகள் இதோ!
SBI, ICICI, HDFC Bank, Axis Bank, BOB வங்கிகளுக்கு WhatsAppயில் சேவைகள் – எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியாவில் அனைத்து துறைகளும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வங்கிகளில் பணப்பரிமாற்றம் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து WhatsApp செயலி மூலமாக ஏராளமான வங்கிகள் தங்களின் வங்கி சேவைகளை வழங்கி வருகிறது. இதனை பெறுவதற்கான வழிமுறைகளை குறித்து விரிவாக பார்ப்போம்.

வங்கி சேவைகள்

இந்தியாவில் அனைத்து சேவைகளையும் தற்போது ஆன்லைன் முறையில் பெற முடிகிறது. அந்த வகையில் தற்போது வங்கி சேவைகளை டிஜிட்டல் முறையில் பெற முடிகிறது. அதாவது ஆன்லைன் முறையில் பணத்தை செலுத்துவது மற்றும் எடுப்பது உள்ளிட்ட செயல்பாடுகளை செய்ய முடிகிறது. இதனை தொடர்ந்து தற்போது வாட்ஸ்அப் மூலமாக SBI, HDFC, ICICI, Bank of Baroda (BoB) மற்றும் Axis Bank உள்ளிட்ட வங்கிகள் தங்களின் சேவைகளை வழங்கி வருகிறது. இப்போது வாட்ஸ்அப் மூலமாக வங்கி சேவைகளை பெறுவதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்ப்போம்.

முதலில் SBI வங்கியில் WhatsAppயில் வங்கி சேவையை பெற தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 90226 90226 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் வாட்ஸ் அப் வங்கி சேவையை பதிவு செய்து கொள்ளலாம். இதையடுத்து HDFC Chat bank மூலம் வாட்ஸ்அப் மூலமாக வங்கி சேவை பெற முடியும். இதில் வங்கி சேவையை பெற பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7070022222 எண்ணுடன் Hi என்ற குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். இதன் மூலமாக இந்த வங்கியின் வாட்ஸ்அப் சேவையை பெற முடியும்.

Jio வின் ரூ.249 முதல் 2 ஜிபி டேட்டா தரும் திட்டங்கள் – முழு விவரம் இதோ!

இதனை தொடர்ந்து, ICICI வங்கியில் சேவையை பெற பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 9324953001 எண்ணுடன் Hi என்ற குறுஞ்செய்தியை அனுப்ப வேண்டும். இதன் மூலமாக டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, செக் புக், பாஸ்புக் உள்ளிட்டவைகளை பெற முடியும். மேலும் பாங்க் ஆப் பரோடா வங்கியும் வாட்ஸ்அப் பேங்கிங் சேவையை அறிமுகப்படுத்துவதாக இணையதளத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து AXIS வங்கியிலும் வாட்ஸ் அப் மூலமாக வங்கி சேவைகளை பெற முடியும். இதன் மூலமாக பேலன்ஸ் என்கியூரி, மினி ஸ்டேட்மெண்ட், காசேலை புத்தகங்கள், உடனடி சேமிப்பு கணக்குகள் உள்ளிட்ட சேவைகளை பெற முடியும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!