Post Office இல் சூப்பரான சேமிப்பு திட்டம் – வட்டி விகிதம் குறித்த முழு விவரங்கள் இதோ!

0
Post Office இல் சூப்பரான சேமிப்பு திட்டம் - வட்டி விகிதம் குறித்த முழு விவரங்கள் இதோ!
Post Office இல் சூப்பரான சேமிப்பு திட்டம் - வட்டி விகிதம் குறித்த முழு விவரங்கள் இதோ!
Post Office இல் சூப்பரான சேமிப்பு திட்டம் – வட்டி விகிதம் குறித்த முழு விவரங்கள் இதோ!

இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஒவ்வொரு சேமிப்பு திட்டங்களிலும் பெறப்படும் லாபங்கள் மாறுபடுகிறது. தற்போது பொது வருங்கால சேமிப்பு திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதம், முதிர்வு தொகை உள்ளிட்ட பலன்களை பற்றி விரிவாக பார்ப்போம்.

சேமிப்பு திட்டம்

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதனால் பொதுமக்கள் பல்வேறு பொருளாதார நெருக்கடி நிலை சந்தித்து வந்தனர். அதன் காரணமாக தங்கள் பணத்தை பாதுகாப்பான முறையில் சேமிக்க வேண்டும் என்றும் நிலையான வருமானத்தை பெற வேண்டும் என்று எண்ணினர். இதில் குறிப்பாக தங்கள் பணத்தை அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் அதிகளவு செலுத்த தொடங்கியுள்ளனர். ஏனெனில் அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் குறைவான நாட்களில் அதிக வட்டி தொகையை முதலீட்டாளர்கள் பெற முடிகிறது.

TN Job “FB  Group” Join Now

அத்துடன் குறைந்தபட்சமாக ரூ.100 முதல் இந்த சேமிப்புத் திட்டங்களில் கணக்கை தொடங்க முடியும் என்பதால் சாதாரண மக்கள் கூட கணக்கை தொடங்க முடிகிறது. தற்போது பொது வருங்கால வைப்பு நிதி சேமிப்பு திட்டங்களில் வழங்கப்படும் வட்டி விகிதம், வரி விலக்கு உள்ளிட்ட பலன்களை பற்றி பார்க்கலாம். இந்த திட்டத்தில் 7.10% வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். ஆனால் 5 ஆண்டுகளுக்கு பிறகு எடுத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 3 முதல் 6 வருடம் வரையில் கடன் பெற்றுக் கொள்ளலாம்.

வாட்ஸ் ஆப் பயனர்கள் கவனத்திற்கு – முக்கிய அப்டேட் வெளியீடு!

அத்துடன் இத்திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 5ம் தேதிக்குள் அக்கவுண்டில் தவணைத் தொகையை செலுத்த வேண்டும். இந்த திட்டத்தில் ஆண்டுக்கு குறைந்தபட்சமாக ரூ. 500 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை செலுத்தி கொள்ளலாம். மேலும் இதில் கிடைக்கும் வட்டி மற்றும் முதலீட்டு தொகைக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அத்துடன் சேமிப்புதாரர் தங்களின் நாமினி குறித்த விவரங்களை கட்டாயமாக குறிப்பிட வேண்டும். அப்போது தான் முதிர்வு காலம் முடிவதற்குள், சேமிப்புதாரர்களுக்கு மரணம் ஏற்பட்டால் அவரின் சேமிப்பு தொகை நாமினிக்கு வழங்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!