2 மாத சம்பளம் & மருத்துவக்காப்பீடுடன் 150 ஊழியர்கள் பணி நீக்கம் – பிரபல நிறுவனம் அதிரடி!

0
2 மாத சம்பளம் & மருத்துவக்காப்பீடுடன் 150 ஊழியர்கள் பணி நீக்கம் - பிரபல நிறுவனம் அதிரடி!
2 மாத சம்பளம் & மருத்துவக்காப்பீடுடன் 150 ஊழியர்கள் பணி நீக்கம் - பிரபல நிறுவனம் அதிரடி!
2 மாத சம்பளம் & மருத்துவக்காப்பீடுடன் 150 ஊழியர்கள் பணி நீக்கம் – பிரபல நிறுவனம் அதிரடி!

HealthifyMe நிறுவனம் பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்கொள்ள 150 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு சில சலுகைகளையும் வழங்கியுள்ளது.

பணி நீக்கம்

உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை காரணமாக பல்வேறு நிறுவனங்கள் தங்களின் லாப நோக்கத்திற்காக ஊழியர்களை புதிதாக பணியமர்த்துவதை முடக்கியுள்ளனர். மேலும் வளர்ச்சியை தக்க வைத்து கொள்ள ஊழியர்களை பணி நீக்கமும் செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது HealthifyMe நிறுவனம் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

அதனால் தங்கள் நிறுவனத்தில் இருக்கும் ஊழியர்களில் 15% முதல் 20% வரை பணி நீக்கம் செய்ய இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், மற்ற நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சனை போன்று தற்போது HealthifyMe நிறுவனத்திலும் ஏற்பட்டுள்ளதால் 150 பணியாளர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் புதிய நேர மாற்றம்.. இனி ஷிப்ட் முறையில் தான் இயங்கும் – சர்வர் விவகாரம் எதிரொலி!

Exams Daily Mobile App Download

மேலும் இவர்களுக்கு நிறுவனத்தின் சார்பாக சில சலுகைகளும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 2 மாதம் வரை சம்பளம் வழங்கப்படுவதுடன் June 2023 வரை மருத்துவ காப்பீடும் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் வருடத்திற்கு 2 வாரங்கள் HealthifyMeயிடம் இருந்து சேவைகளும் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!