தமிழகத்தில் ஜூன் 14 முதல் தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு – கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டு துவங்க உள்ள நிலையில் மாணவர்களின் சேர்க்கை, பாடப்புத்தகங்களை வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் ஜூன் 14 முதல் பள்ளிகளுக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிக்கு வருகை:
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கொரோனா 2 ஆம் அலை தாக்கத்தை தொடர்ந்து பள்ளிகள் இன்று வரை முழுமையாக திறக்கப்படவில்லை. இதற்கிடையில் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில், நோய் பரவலை கருத்தில் கொண்டு 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
Whats App டெலீட் ஆன மெசேஜ்களை படிப்பது எப்படி? இதோ எளிய வழிமுறைகள்!!
இதை தொடர்ந்து வரும் 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி வகுப்புகள் இம்மாதம் முதல் துவங்க உள்ளது. அந்த வகையில் வரும் ஜூன் 14 ஆம் தேதி துவங்கி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ‘தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று காரணமாக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் அறிவித்தார்.
TN Job “FB
Group” Join Now
இம்மாணவர்களுக்கு எந்த வகையில் மதிப்பெண்களை வழங்குவது, அவர்கள் உயர் கல்வி பெறுவதற்கான சான்றிதழ்களை வழங்குவது போன்ற பணிகளை செய்ய வேண்டியுள்ளது. மேலும் வரும் கல்வியாண்டிற்கு மாணவர் சேர்க்கை துவங்கவுள்ளதால், அவர்களுக்கு கொடுக்க வேண்டிய பாடப்புத்தகங்கள் மற்றும் கற்றல் உபகரணங்களை வழங்குதல், மாணவர்களின் கற்றல் சார்ந்த நிகழ்ச்சிகளை பார்வையிடல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இதனால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வரும் ஜூன் 14 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு வரும்படி அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இவற்றை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.