ஆயுள் காப்பீட்டு பாலிசிதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – HDFC வங்கி வெளியீடு!

0
ஆயுள் காப்பீட்டு பாலிசிதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு - HDFC வங்கி வெளியீடு!
ஆயுள் காப்பீட்டு பாலிசிதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு - HDFC வங்கி வெளியீடு!
ஆயுள் காப்பீட்டு பாலிசிதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – HDFC வங்கி வெளியீடு!

HDFCயில் ஆயுள் காப்பீட்டு திட்டங்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு போனஸ் தொகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனை பெறுவதற்கு சில வரைமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

போனஸ் தொகை

ஆயுள் காப்பீட்டு திட்டத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு HDFC வங்கி சிறப்பு போனஸ் சலுகைகளை அறிவித்துள்ளது. அதாவது ஒருவரது காப்பீட்டுத்தொகையில் காப்பீட்டாளர் ‘உபரி’ என்று அழைக்கப்படும் லாபத்தை கிட்டும் போது போனஸ் தொகை கிடைக்கிறது. பொதுவாக, இவ்வகை போனஸானது பாலிசிதாரரின் மரணம், சரணடைதல் அல்லது பாலிசியின் முதிர்ச்சி ஆகியவை ஏற்படும் போது வழங்கப்படுவது உண்டு.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து சேவைகள்? முதல்வர் ஆலோசனை!

போனஸ் தொகையானது பாலிசி செயல்படுத்தப்படும் காலத்தில் வளர்ந்துக்கொண்டே இருக்கும். இந்த போனஸ் போன்ற நன்மைகள், பங்கேற்கும் நிதியில் உருவாக்கப்படும் உபரிகளில் ஒரு பங்கைப் பெறும் பாலிசிதாரர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் பணத்தொகை அதிகரிக்கும். அதன் படி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், 15.49 லட்சம் தகுதியான பாலிசிதாரர்களுக்கு ரூ.2180 கோடி ரூபாய் போனஸ் அளிப்பதாக HDFC வங்கி அறிவித்தது.

இது அதற்கு முந்தைய ஆண்டின் போனஸை விட 44 சதவீதம் அதிகமாகும். இந்த தலைகீழ் போனஸ் திட்டங்களுடன் HDFC வங்கி சில ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களையும் அளிக்கிறது. அவை பணம் திரும்ப பெறும் திட்டம், குழந்தைகளுக்கான திட்டம், எண்டோவ்மென்ட் அஷ்யூரன்ஸ், சேமிப்பு உத்தரவாத திட்டம், உத்தரவாத திட்டம் உள்ளிட்டவை ஆகும். HDFC ன் பாலிசிதாரராக அறிவிக்கப்படும் போது, நீங்கள் போனஸுக்கு தகுதியுள்ளவரா என்பதை அறிய உங்கள் பாலிசி ஆவணத்தில், பாலிசி லாபத்தில் பங்கேற்கிறதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

அந்த வகையில் யூனிட் மற்றும் இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டங்கள், சந்தை இணைக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் காப்பீட்டாளரின் லாபங்களில் பங்கேற்காதவைகள் போனஸ் பெற தகுதியற்றவை. மேலும் டெர்மினல் போனஸூடன் சில திட்டங்கள் ரொக்க போனஸையும் கொடுக்கும். ஒரு தலைகீழ் போனஸ் தொகையானது, பாலிசியில் சேர்க்கப்பட்டு அவை முதிர்ச்சி அடையும் வரை தொகை சேர்ந்து கொண்டே இருக்கும். அதே நேரத்தில் லாபத்துடன் கூடிய பாலிசிகளில் கிடைக்கும் வருமானம் போனஸை சார்ந்து இருக்காது.

TN Job “FB  Group” Join Now

அத்தகைய பாலிசிகளில் உத்தரவாதம் சேர்த்தல் (GA) என்பது இருக்கும். அதே நேரத்தில் GA என்பது பாலிசிக்கான கூடுதல் வருமானமாகும். பொதுவாக 1,000 ரூபாய்க்கு ஒரு குறிப்பிட்ட தொகை போனஸாக அறிவிக்கப்படுகிறது. அதன் படி ரூ.1 லட்சம் காப்பீட்டுத் தொகைக்கான மொத்த போனஸ் தொகை ரூ.4,000 ஆக இருக்கும். அந்த வகையில் பத்து ஆண்டு கால பாலிசி என்றால், மொத்த போனஸ் ரூ.40,000 ஆக இருக்கும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!