தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து சேவைகள்? முதல்வர் ஆலோசனை!
தமிழகத்தில் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது பற்றி நாளை முதல்வர் சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இதில் அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து சேவைகளை அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
முதல்வர் ஆலோசனை:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு சுகாதாரத்துறை அறிவுறுத்தலின் பேரில் மாநிலத்தில் மே 10 முதல் முழு ஊரடங்கை பிறப்பித்தது. தொற்று எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 35,000 ஆக அதிகரித்து வந்தது. இதனால் மே 24க்கு பின்னர் தளர்வுகள் இல்லாத ஊரடங்காக மேலும் நீட்டிக்கப்பட்டு வந்தது. கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. 18 வயது வயது முதல் அனைவர்க்கும் இலவசமாக மாநிலம் தோறும் உள்ள மருத்துவமனைகள் மூலமாகவும், தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டும் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
தமிழக அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் கவனத்திற்கு – இணை இயக்குனர் சுற்றறிக்கை!
இதன் விளைவாக கொரோனா தொற்று பாதிப்புகள் சற்று குறைந்து வருகிறது . இதனால் ஜூன் 14 முதல் முழு ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழக்தில் 11 மாவட்டங்களில் மட்டும் தொற்று பரவல் அதிகமாக உள்ளது. இதனால் அந்த மாவட்டங்களுக்கு தளர்வுகள் அளிக்கப்படவில்லை. மாவட்டங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. 2 மற்றும் 3ம் வகையில் உள்ள மாவட்டங்களுக்கு மட்டுமே தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. வகை மூன்றில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் 50 சதவீத இருக்கைகளுடன் பேருந்துகள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
TN Job “FB
Group” Join Now
கொரோனா பரவல் அதிகமுள்ள மாவட்டங்கள் முதல் வகையில் உள்ளது. தற்போது இந்த 11 மாவட்டங்களில் தொற்று பரவல் குறைந்து வருவதால் அந்த மாவட்டங்களிலும் பேருந்துகள் இயக்குவது பற்றியும் கூடுதல் புதிய தளர்வுகளை அறிவிப்பது தொடர்பாகவும் நாளை (25.06.2021) முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் காலை 11 மணி அளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் பங்கேற்கவுள்ளனர்.