மாணவர்களுக்கு வழங்கப்படும் புத்தக பைகளில் தலைவர்கள் படம் – நீதிமன்றம் உத்தரவு!

0
மாணவர்களுக்கு வழங்கப்படும் புத்தக பைகளில் தலைவர்கள் படம் - நீதிமன்றம் உத்தரவு!
மாணவர்களுக்கு வழங்கப்படும் புத்தக பைகளில் தலைவர்கள் படம் - நீதிமன்றம் உத்தரவு!
மாணவர்களுக்கு வழங்கப்படும் புத்தக பைகளில் தலைவர்கள் படம் – நீதிமன்றம் உத்தரவு!

மாணவர்களின் புத்தகப்பை உள்ளிட்ட பொருட்களில் கட்சி தலைவர்களின் படத்தை பயன்படுத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புத்தகப் பைகளில் படம்:

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு புத்தகப்பை, பஸ் பாஸ், மடிக்கணினி, சைக்கிள் மற்றும் உதவித்தொகை என பல வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு வழங்கப்படும் பொருட்களில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி படங்கள் அச்சிடப்பட்டுள்ளது.

Jio Phone Next செப்.10ம் தேதி வெளியீடு – பயனர்களிடையே வரவேற்பு!

இவ்வாறு அச்சிடப்பட்டுள்ள புத்தகப் பைகள் மற்றும் நோட்டு புத்தகங்கள் ஆகியவை கிடப்பில் போடப்பட்டு உள்ளதாகவும், அவற்றை விநியோகிக்க வேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாகவும், ஆட்சி மாற்றத்திற்கு பின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி முன் அமர்வுக்கு வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, ஏற்கனவே அச்சிடப்பட்ட புத்தக பைகள் மற்றும் புத்தகங்கள் கிடப்பில் போடக்கூடாது என்றும், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரியப்படுத்தியுள்ளார்.

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

மேலும் இனிமேல் மாணவர்களுக்கு வழங்கப்படும் பொருட்களில் படங்கள் அச்சிடக்கூடாது என்று முதல்வர் அறிவுறுத்தல் வழங்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி இதுபோன்ற தலைவர்களின் படங்கள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் பொருட்களில் அச்சிடுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும், இது குறித்த நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். அரசு நிதியை தவறாக பயன்படுத்தக் கூடாது என்றும் கூறி வழக்கை முடித்து வைத்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!