Vodafone Idea பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 30 நாட்கள் வேலிடிட்டி ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்!

0
Vodafone Idea பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் - 30 நாட்கள் வேலிடிட்டி ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்!
Vodafone Idea பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் - 30 நாட்கள் வேலிடிட்டி ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்!
Vodafone Idea பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 30 நாட்கள் வேலிடிட்டி ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்!

டிராய் விதித்த புதிய கட்டுப்பாடுகளின் படி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதன்படி, பயனர்களுக்கு பயனளிக்கும் வகையிலான புதிய திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது. ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களை தொடர்ந்து தற்போது 30 நாட்கள் வேலிடிட்டி திட்டங்களை வோடபோன் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

30 நாட்கள் வேலிடிட்டி திட்டம்:

இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ நிறுவனம் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பிளானை ‘ட்ரூ பிளான்’ என சொல்லி அறிமுகம் செய்திருந்தது. பொதுவாக மாதாந்திர ப்ரீபெய்டு பிளான்கள் 28 நாட்களுக்கு மட்டுமே வேலிடிட்டி கொண்டிருந்தன. இந்நிலையில், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI), டெலிகாம் ஆபரேட்டர்கள் குறைந்தபட்சம் ஒரு ரீசார்ஜ் திட்டத்தையேனும் 30 நாட்களுக்கு வழங்குமாறு சொல்லி இருந்தது. இந்த உத்தரவை ஏற்றே ஜியோ தற்போது 30 நாட்கள் வேலிடிட்டி பிளானை கொண்டுள்ளது. இந்த திட்டத்திற்கு மக்களிடம் வரவேற்பு கிடைத்து உள்ளது. இதை அடுத்து முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்று ஏர்டெல்.

ஓய்வூதியம் பெறுவோர் கவனத்திற்கு – LTA செலுத்துவதற்கு நாமினியை மாற்றலாம்! புதிய விதிகள்!

இந்நிறுவனம் தனது ப்ரீபெய்டு சிம் கார்டு பயனர்களுக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இரண்டு பிளான்களை அறிமுகம் செய்துள்ளது. 296 ப்ரீபெய்ட் பிளான் மூலம் அன்லிமிடெட் தொலைபேசி அழைப்பு வசதி, தினசரி 100 குறுஞ்செய்திகள் (SMS) மற்றும் 25 ஜிபி 4ஜி அதிவேக இணைய இணைப்பு வசதியை வாடிக்கையாளர்கள் பெறலாம்.மேலும் ரூபாய் 310 ப்ரீபெய்ட் பிளான் மூலம் அன்லிமிடெட் தொலைபேசி அழைப்பு வசதி, தினசரி 100 குறுஞ்செய்திகள் (SMS) மற்றும் தினசரி 2ஜிபி மொபைல் டேட்டா பயனர்கள் பெறலாம் என சொல்லப்பட்டுள்ளது. தினசரி மொபைல் டேட்டா பயன்படுத்தி முடித்தவர்களுக்கு 64kbps வேகத்தில் இணைய இணைப்பு கிடைக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதோடு இரண்டு திட்டங்களிலும் பயனர்களுக்கு 30 நாட்கள் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் வெர்ஷன் இலவசமாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNUSRB SI தேர்வுக்கு தயாராவோரா? உங்களுக்கான பதிவு..!

இந்நிலையில் வோடஃபோனும் தற்போது 30 நாட்கள் வேலிட்டியை வழங்கும் இரண்டு திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின்படி ரூ.327 நாட்களுக்கு ரீசார்ஜ் செய்தால் அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 100 SMS , மொத்தமாக 25 ஜிபி டேட்டா 30 நாட்களுக்கு வழங்கப்படும். அதேபோல் ரூ.337-க்கு ரீசார்ஜ் செய்தால் தினம் 100 SMS, அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் 28 ஜிபி டேட்டா 31 நாட்களுக்கு வழங்கப்படும். இத்துடன் விஐ மூவிஸ் மற்றும் டிவி செயலிக்கான சந்தாவும் இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மேலும் சில சலுகைகளும் பயனர்களுக்கு கிடைக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!