விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மீண்டும் TRP ரேட்டிங்கில் சாதனை!

0
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - மீண்டும் TRP ரேட்டிங்கில் சாதனை!
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - மீண்டும் TRP ரேட்டிங்கில் சாதனை!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மீண்டும் TRP ரேட்டிங்கில் சாதனை!

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடர் ஆரம்பம் முதல் ரசிகர்களின் மனம் கவர்ந்த தொடராக உள்ளது. இந்நிலையில், கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோஷினி மாற்றப்பட்ட பின்னர், தற்போது மீண்டும் தொடர் முன்னணிக்கு வந்துள்ளது.

பாரதி கண்ணம்மா:

விஜய் டிவியின் தொடர்கள் என்றாலே மக்கள் தனி எதிர்பார்ப்புடன் பார்க்க தொடங்கி விடுகின்றனர். இதனால் கதையின் போக்கை ரசிகர்களின் மனம் விரும்பும் படி தொடர்கள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பாரதி கண்ணம்மா தொடர் ஆரம்பம் முதல் அதிக வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்று வருகிறது. மக்களிடம் இருந்த வரவேற்பு காரணமாக ஆரம்பம் முதல் ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வருகிறது. அதிலும் சின்னத்திரையிலேயே நம்பர் 1 தொடர் என்ற பெருமையும் இருந்து வருகிறது. இந்நிலையில்,ரசிகர்கள் எதிர்பாராத வண்ணன் கதையில் அடுத்தடுத்து மாற்றங்கள் நடந்து வருகிறது.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் மூடல்? ஆன்லைன் வகுப்புகளை தொடங்க வலியுறுத்தல்!

பாரதியின் தம்பியாக அகிலன் என்கிற முக்கிய கதாபாத்திரம் சில மாதங்களுக்கு முன்னர் மாற்றப்பட்டது. இதற்கு பதிலாக புதிதாக ஒருவர் அகிலன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், பாரதி கண்ணமத்தொடரில் வெற்றிக்கு முக்கிய காரணியாக இருந்த கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோஷினி சில காரணங்களால் தொடரில் இருந்து விலகியுள்ளார். இவருக்கு பதிலாக வினுஷா என்ற நடிகை நடித்து வருகிறார். இதனால் ஒரு சில வாரங்களாக பாரதி கண்ணம்மா தொடர் ரேட்டிங்கில் சற்று பின் தங்கிய நிலையில் இருந்தது.

திருப்பதி தரிசனம் செய்ய திட்டமிடுவோர் கவனத்திற்கு – டிக்கெட் முன்பதிவு! முக்கிய தகவல்!

இருந்தாலும், தற்போது பாரதியும், கண்ணம்மாவும் சேர்ந்து இருப்பது போல் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் அனைத்தும் மக்களுக்கு மிகவும் பிடித்து விட்ட காரணத்தால் தற்போது ரேட்டிங் மீண்டும் முன்னிலைக்கு வந்துள்ளது. 46 வது வாரத்தில், அதவாது கடந்த வாரத்திற்கு முந்தய வாரத்தில் 11.6 என்ற புள்ளிகளை பெற்றிருந்த நிலையில், தற்போது பாரதி கண்ணம்மா மீண்டும் 11.9 என்ற ரேட்டிங் புள்ளிகளைப் பெற்று மீண்டும் முன்னணிக்கு வந்துள்ளது. இதனால் தற்போதைய கதையின்போக்கு தான் சில வாரங்களுக்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!