Reliance Jio, Airtel, Vi பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பல புதிய திட்டங்கள் அறிமுகம்!

0
Reliance Jio, Airtel, Vi பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் - பல புதிய திட்டங்கள் அறிமுகம்!
Reliance Jio, Airtel, Vi பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் - பல புதிய திட்டங்கள் அறிமுகம்!
Reliance Jio, Airtel, Vi பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பல புதிய திட்டங்கள் அறிமுகம்!

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் ரூ.500க்குள் இருக்கும்படியான பல ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதற்கான முழு விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Reliance Jio, Airtel, Vi:

நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் பல்வேறு வகையான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, ரூ.500க்கும் கீழ் உள்ள சிறப்பான ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளார்கள். தற்போது ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்த ரீசார்ஜ் திட்டங்களை பார்க்கலாம். முதலில், 28 நாட்கள் செல்லுபடியாகும் திட்டமான ரூ.239க்கு தினசரி 1.5ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100SMS, வரம்பற்ற கால் அழைப்பு ஆகியவை வழங்கப்படுகிறது. அடுத்ததாக 30 நாட்கள் செல்லுபடியாகும் படியான ரூ.259 ஜியோ ரீசார்ஜ் திட்டமானது தினசரி 1.5ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100SMS மற்றும் வரம்பற்ற கால் அழைப்பு வழங்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

மேலும், 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் ரூ.299 ஜியோ ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100SMS மற்றும் வரம்பற்ற கால் அழைப்பும், 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் ரூ.419 ப்ரீபெய்ட் ஜியோ திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100SMS மற்றும் வரம்பற்ற கால் அழைப்பும், 56 நாட்களுக்கு செல்லுபடியாகும் ரூ.479 ஜியோ ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100SMS மற்றும் வரம்பற்ற கால் அழைப்பும் வழங்கப்படுகிறது. தற்போது, ஏர்டெல் அறிமுகம் செய்த ரீசார்ஜ் திட்டங்களை பார்க்கலாம்.

முதலில், 21 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.209 ஏர்டெல் ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100SMS மற்றும் வரம்பற்ற கால் அழைப்பும், 28 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.265 ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100SMS மற்றும் வரம்பற்ற கால் அழைப்பும், ரூ.299 ஏர்டெல் ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100SMS மற்றும் வரம்பற்ற கால் அழைப்பும், 28 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.359 ஏர்டெல் ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100SMS மற்றும் வரம்பற்ற கால் அழைப்பு, ரூ.100 ஃபாஸ்டேக் கேஷ்பேக், 3 மாத இலவச அப்பல்லோ உறுப்பினர் போன்ற சலுகையும், ரூ. 399 ஏர்டெல் ரீசார்ஜ் திட்டத்தில் ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS வசதியும், 28 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.499 ஏர்டெல் திட்டத்தில் கூடுதலாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா 3 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.

பள்ளிகளுக்கு இனி வெள்ளிக்கிழமைகளில் வார விடுமுறை? அரசு அதிரடி அறிவிப்பு!

மேலும், 56 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.479 ஏர்டெல் ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா, ரூ. 100 ஃபாஸ்டேக் கேஷ்பேக் மற்றும் 3 மாத இலவச அப்பல்லோ மெம்பர்ஷிப் பிளான், ஒரு நாளைக்கு 100SMS மற்றும் வரம்பற்ற கால் அழைப்பும் வழங்கப்படுகிறது. அதே போல 28 நாட்கள் வேலிடிட்டி காலத்துடன் கூடிய ரூ.499 ஏர்டெல் ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய வசதி வழங்கப்படுகிறது. தற்போது Vodafone அறிமுகம் செய்துள்ள ரீசார்ஜ் திட்டங்களை பார்க்கலாம்.

முதலில், 18 நாட்கள் செல்லுபடியாகும்படியான Vodafone ரூ.199 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 1GB டேட்டா, தினமும்100 SMS, வரம்பற்ற குரல் அழைப்பு வசதியும், 21 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தில் ரூ.209 திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டாவும், 21 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.249 வோடபோன் ரீசார்ஜ் திட்டத்தில் தினமும் 1.5ஜிபி டேட்டாவும், ரூ.239 வோடபோன் ரீசார்ஜ் திட்டத்தில் தினமும் 1ஜிபி டேட்டாவும் மேற்குறிப்பிட்ட அனைத்து சலுகைகளுக்கு தினமும்100 SMS, வரம்பற்ற குரல் அழைப்பு வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, 31 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.319 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டாவுடன், இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இலவச நெட் ஒர்க் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, 28 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.409 வோடபோன் ரீசார்ஜ் திட்டத்திலும் இலவச வரம்பற்ற டேட்டா மற்றும் தினமும் 3.5ஜிபி தினசரி டேட்டா வசதி வழங்கப்படுகிறது. இதனையடுத்து, ரூ.475 வோடபோன் ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 4ஜிபி டேட்டா மற்றும் நள்ளிரவு முதல் காலை வரைக்கும் இலவச வரம்பற்ற டேட்டா வசதி வழங்கப்படுகிறது. அதே போல ரூ.499 வோடபோன் ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, ஒரு வருடத்திற்கு இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா, நள்ளிரவு 12:00 மணி முதல் காலை 6:00 மணி வரை இலவச டேட்டா போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!