ரயில்வே ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – போனஸ் தொகைக்கு மத்திய அரசு ஒப்புதல்!

0
ரயில்வே ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் - போனஸ் தொகைக்கு மத்திய அரசு ஒப்புதல்!
ரயில்வே ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் - போனஸ் தொகைக்கு மத்திய அரசு ஒப்புதல்!
ரயில்வே ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – போனஸ் தொகைக்கு மத்திய அரசு ஒப்புதல்!

இனி வரும் நாட்கள் பண்டிகை காலமாக இருப்பதால், அனைத்து துறை ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு அல்லது போனஸ் குறித்து தகவல்கள் வெளியாக உள்ளது. அந்த வகையில், தற்போது 2021-22க்கான ரயில்வே ஊழியர்களுக்கான உற்பத்தி தொடர்பான போனஸை மத்திய அமைச்சரவை வழங்க வாய்ப்புள்ளது.

போனஸ் தொகை:

ரயில்வே அமைச்சகத்தின் படி, 1979-80 ஆம் ஆண்டில் PLB (production-linked bonus) என்ற உற்பத்தி தொடர்பான போனஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய அரசின் முதல் துறை சார்ந்த நிறுவனமாக ரயில்வே இருந்தது. மேலும் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் செயல்திறனில் ஒரு முக்கிய பங்காக ரயில்வே துறை இருந்தது குறிப்பிடத்தக்கது. போனஸ் கொடுப்பனவுச் சட்டம் ரயில்வேக்கு பொருந்தாது என்ற போதிலும், ‘போனஸ் செலுத்துதல் சட்டம் -1965’ சட்டத்தில் உள்ள சில கொள்கைகளை வைத்து ஊழியர்களுக்கு போனஸ் அளிக்கப்படுகிறது.

ரயில்வேக்கான PLB திட்டம் 1979-80 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது. மேலும் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு கூட்டமைப்புகளான அகில இந்திய ரயில்வே மேன்ஸ் ஃபெடரேஷன் மற்றும் நேஷனல் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியன் ஃபெடரேஷன் ஆகியவற்றுடன் கலந்தாலோசித்து அமைச்சரவையின் ஒப்புதலுடன் இது நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில், மத்திய அமைச்சரவை 2021-22ஆம் ஆண்டிற்கான ரயில்வே ஊழியர்களுக்கான போனஸை தசரா பண்டிகைக்கு முன்னதாக வழங்க வாய்ப்புள்ளதாக தற்போது வெளியாகி உள்ளது.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு அக். 9 வரை விடுமுறை அறிவிப்பு – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

Exams Daily Mobile App Download

அமைச்சகத்தின் அறிக்கையின் படி, 11 லட்சம் அரசிதழ் அல்லாத ரயில்வே ஊழியர்கள் 78 நாட்களுக்கு உரிய போனஸை பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. முந்தைய ஆண்டு உற்பத்தித்திறன் சார்ந்த போனஸிற்காக கிட்டத்தட்ட ரூ.1,985 கோடி செலவானது. ஆனால் தற்போது நடப்பு ஆண்டில் இந்த நடவடிக்கையால் இந்திய ரயில்வேக்கு 2,000 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஆகும். மேலும், ஊழியர்கள் போனஸ் தொகையில் அதிகபட்சமாக ரூ.17,951 பெற வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!