மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – உயரும் சம்பளம்! விரைவில் வெளியாக உள்ள அறிவிப்பு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - உயரும் சம்பளம்! விரைவில் வெளியாக உள்ள அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - உயரும் சம்பளம்! விரைவில் வெளியாக உள்ள அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – உயரும் சம்பளம்! விரைவில் வெளியாக உள்ள அறிவிப்பு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஃபிட்மெண்ட் காரணி அதிகரிப்பது தொடர்பாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

ஊழியர்களுக்கான சம்பளம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு கொரோனா காரணமாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல் இருந்தது. இதையடுத்து கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலையில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. அதன்படி மத்திய அரசு ஊழியர்கள் 31% அகவிலைப்படியை பெற்று வந்தனர். இதனை தொடர்ந்து மீண்டும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. அதன்படி கடந்த ஜனவரி மாதத்தில் மீண்டும் 3% அகவிலைப்படி உயர்வு பெற்று 34% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். பொதுவாக ஆண்டுக்கு இரு முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்.

அந்த வகையில் நடப்பு நிதியாண்டில் AICPI தரவுகளின்படி, இம்மாதத்திற்கான அகவிலைப்படி 4 முதல் 5% வரை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் ஊழியர்களின் சம்பளமும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஃபிட்மெண்ட் காரணியை அரசு உயர்த்து தொடர்பாக அறிவிப்பு வெளியானால் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் தற்போது 7ஆவது ஊதியக் குழுவின் அடிப்படையில் ஊழியர்களின் ஃபிட்மெண்ட் காரணி தீர்மானிக்கப்படுகிறது.

தமிழகத்தில் ஆசிரியர்கள் பணி மாறுதல் குறித்த முக்கிய தகவல் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

அதன்படி ஊழியர்களின் ஃபிட்மெண்ட் காரணி அதிகரிக்கப்பட்டால், குறைந்தபட்ச சம்பளம் உயரும். மேலும் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் இரு மடங்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஊழியர்களின் ஃபிட்மெண்ட் காரணி 2.57 மடங்காக உள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் குறைந்தபட்சமாக ரூ.18000 முதல் அதிகபட்சமாக ரூ.56900 வரை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விரைவில் ஃபிட்மெண்ட் காரணி உயர்த்துவது தொடர்பாக அறிவிப்பு வெளியானால் இந்த அடிப்படை சம்பளம் 3 மடங்கு உயரும். இதனை தொடர்ந்து தற்போது 8வது ஊதியக் குழு விரைவில் அமைக்கப்பட உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!