தமிழகத்தில் ஆசிரியர்கள் பணி மாறுதல் குறித்த முக்கிய தகவல் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

0
தமிழகத்தில் ஆசிரியர்கள் பணி மாறுதல் குறித்த முக்கிய தகவல் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் ஆசிரியர்கள் பணி மாறுதல் குறித்த முக்கிய தகவல் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் ஆசிரியர்கள் பணி மாறுதல் குறித்த முக்கிய தகவல் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் தொடக்க கல்வி, சார்நிலைப்பணி மற்றும் பிற துறையிலிருந்து தொடக்க கல்வி துறைக்கு அலகு விட்டு அலகு மாறுதல் பெற தடையில்லா சான்று பெற்ற ஆசிரியர்களின் விண்ணப்பம் பதிவேற்றம் செய்வது தொடர்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் தற்போது நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்கள் அனைவரும் ஆர்வமுடன் பள்ளிக்கு செல்கின்றனர். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் செயல்படாமல் இருந்த நிலையில் தற்போது தொற்று குறைந்துள்ளதால் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை அதிகமாக காணப்பட்டு வருகிறது. இதனை சரி செய்யும் விதமாக தமிழக அரசு தற்காலிக பணி நியமன அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா காலத்தில் பள்ளி மாணவர்களிடையே கற்றல் வெகுவாக குறைய தொடங்கியது. இதனால் தமிழக பள்ளி கல்வி துறை மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும் விதமாக பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும் மாணவர்களுக்கு மாலை நேரத்தில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தி வருகின்றன. இதை தவிர மாணவர்களின் மன உறுதியை அதிகரிக்க தகுந்த மனநல மருத்துவர்கள் மூலம் கவுன்சிலிங் வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக கடந்த சில நாட்களுக்குமுன் பள்ளி கல்வி துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் 2021-2022 ம் கல்வியாண்டில் ஊராட்சி, ஒன்றிய,நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல், பதிவு உயர்வு, பணிநிரவல் கலந்தாய்வுகள் மற்றும் மனமொத்த மாறுதல்கள் ஆகியவை கல்வி மேலாண்மை தகவல் மூலம் நடத்தப்பட்டது.

தமிழகத்தில் சிறுபான்மையின மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

Exams Daily Mobile App Download

தற்போது அலகு விட்டு அலகு மாறுதல் பெற தடையில்லா சான்று பெற்று பிற துறைகளில் இருந்து தொடக்கக் கல்வி துறைக்கு மாற விரும்பும் ஆசிரியர்கள் தங்களது விண்ணப்பங்களை 24.8.2022 மற்றும் 25.8.2022 ல் கல்வி மேலாண்மை தகவல் மூலம் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். மேலும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை சரிபார்த்து ஆசிரியர்கள் பிற துறையில் இருந்து அலகு விட்டு அலகு மாறுதல் தடையின்மை சான்றை பதிவு செய்து இணையவழியில் ஏற்பளிக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இணையவழியில் ஏற்பளிக்கப்ட்ட விண்ணப்பங்களுக்கு அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வு 29.8.2022 அன்று பிற்பகல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பணிகளை எந்தவித புகாருக்கும் இடமின்றி முடித்திட வேண்டும் என்று மாவட்ட கல்வி அலுவலர் அனைத்து மாவட்ட முதன்மை அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here