ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – போட்டோவை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள்!

0
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் - போட்டோவை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள்!
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் - போட்டோவை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள்!
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – போட்டோவை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள்!

இந்தியாவில் ஆதார் அட்டை என்பது தனிநபர் அடையாள ஆவணங்களில் முக்கியமானதாக உள்ளது. மேலும் தற்போது அனைத்து பயன்பாடுகளுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் இதில் உள்ள விவரங்கள் சரியானதாக இருக்க வேண்டும். அதன்படி தற்போது உங்களின் புகைப்படத்தை மாற்ற வேண்டுமெனில் அதற்கான வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.

ஆதார் கார்டு

இந்தியாவில் அனைத்து பயன்பாடுகளுக்கும் ஆதார் அட்டை முக்கிய ஆவணமாக உள்ளது. இதையடுத்து அரசின் நலத்திட்டங்கள் கூட ஆதார் கார்டு மூலமாக தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் வங்கிக் கணக்கு, மொபைல் எண் உள்ளிட்ட தனிநபர் சார்ந்தவைகளுக்கு ஆதார் எண் இணைக்க வேண்டியுள்ளது. அதனால் இதில் இடம்பெற்றிருக்கும் விவரங்கள் அனைத்தும் சரியானதாக இருக்க வேண்டும். இதில் ஏதேனும் உங்களின் விவரங்கள் சரியானதாக இல்லை என்றாலோ அல்லது முகவரி, பெயர் உள்ளிட்டவை மாற்ற வேண்டும் என்றாலோ UIDAI ஆணையம் மாற்றங்களை செய்ய அனுமதி வழங்குகிறது.

இதையடுத்து இதில் புகைப்படம் பெரும்பாலும் மிகவும் பழைய போட்டோவாக இருக்கும். ஏனெனில் ஆதாரை பள்ளிப் பருவத்திலோ அல்லது உங்களின் இளமை பருவத்துதிலோ பெற்றிருப்பீர்கள். அதனால் தற்போது உள்ள புகைப்படத்தை மாற்றினால் உங்களை அடையாளம் காண முடியும். இதனை சுலபமாக ஆன்லைன் வாயிலாக மாற்ற UIDAI என்ற ஆதார் ஆணையம் அனுமதிக்கிறது. ஆனால் ஆதாரில் போட்டோ மற்றும் மொபைல் நம்பரை மாற்றுவதற்கு ஆன்லைனில் வசதிகள் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. இதற்கு நீங்கள் ஆதார் மையத்திற்கு தான் செல்ல வேண்டியிருக்கும்.

ஆனால் நீங்கள் ஆன்லைன் வாயிலாக ஆதாரில் உங்கள் புகைப்படத்தை மாற்றுவதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆதார் இ-சேவை மையத்திற்கு சென்று கொடுக்க வேண்டும். இதையடுத்து உங்களின் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு கைரேகைப் பதிவு வைத்த பிறகு உங்கள் பழைய போட்டோ மாற்றப்படும். இதற்கு சேவை கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். இதே போல் நீங்கள் ஆதாரில் தவறாக கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும் சுலபமாக மாற்றி கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here