Post Officeல் பெண் குழந்தைகளுக்கான சூப்பரான சேமிப்பு திட்டம் – முழு விபரங்கள் இதோ!

0
Post Officeல் பெண் குழந்தைகளுக்கான சூப்பரான சேமிப்பு திட்டம் - முழு விபரங்கள் இதோ!
Post Officeல் பெண் குழந்தைகளுக்கான சூப்பரான சேமிப்பு திட்டம் - முழு விபரங்கள் இதோ!
Post Officeல் பெண் குழந்தைகளுக்கான சூப்பரான சேமிப்பு திட்டம் – முழு விபரங்கள் இதோ!

இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் உள்ள வயது வரம்பு, அதிகபட்ச வைப்பு தொகை, வட்டி விகிதம் உள்ளிட்டவற்றை பற்றி விரிவாக பார்க்கலாம்.

சேமிப்பு திட்டம்

இந்தியாவில் தற்போது அஞ்சல் அலுவலகங்களில் உள்ள சேமிப்பு திட்டத்தில் பெரும்பாலானோர் கணக்கை தொடங்கியுள்ளனர். ஏனெனில் அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் வங்கிகளை காட்டிலும் இரட்டிப்பு லாபங்கள் கிடைக்கிறது. அத்துடன் அஞ்சல் அலுவலகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் செயல்படுவதால் பணத்திற்கு முழு பாதுகாப்பும் கிடைப்பதால் இதில் பல்லாயிரக்கணக்கானோர் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். மேலும் இதில் கிடைக்கும் தொகை கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் மிகவும் உதவியாக உள்ளது.

Exams Daily Mobile App Download

தற்போது பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பெண் குழந்தைகளுக்கான சிறப்பான சேமிப்பு திட்டமாக செல்வமகள் சேமிப்பு திட்டம் உள்ளது. இதில் தற்போது என்னென்ன பலன்கள் கிடைக்கிறது என்பது குறித்து விரிவாக பார்ப்போம். இதில் குறைந்தபட்சமாக ரூ.250 செலுத்தி கணக்கை தொடங்கலாம். அத்துடன் இதில் ஒரு நிதியாண்டில் ரூ.250 முதல் 150000 ரூபாய் வரை வைப்புத்தொகையாகச் செலுத்தலாம். மேலும் இந்த திட்டத்தில் 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் பெயரில் கூட கணக்கை தொடங்க முடியும்.

BBNL மத்திய அரசு நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலை – விண்ணப்பிக்க ஜூன் 17 இறுதி நாள்..!

மேலும் இந்த திட்டம் தொடர்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியிருப்பதாவது, பெண் குழந்தைகள் மேம்பாட்டிற்கான இந்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் 2015ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். அத்துடன் இதில் 7.6 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் உள்ள பெண் குழந்தைகளின் வயது 18 வயது நிறைவடையும் போது சேமிப்பு பணத்தில் இருந்து 50% வரை முன்பணமாக பெற்று கொள்ளலாம். அதனால் விருதுநகர் மாவட்ட மக்கள் இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் இது தொடர்பாக விருதுநகர் – 04562-243232, சிவகாசி – 04562- 220150, அருப்புக்கோட்டை – 04566 – 220503, இராஜபாளையம் – 04563- 222240 உள்ளிட்ட எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!