அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா – மாநில அரசு கண்டிசன்.. முழு விவரம்!

0
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா - மாநில அரசு கண்டிசன்.. முழு விவரம்!
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா - மாநில அரசு கண்டிசன்.. முழு விவரம்!
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா – மாநில அரசு கண்டிசன்.. முழு விவரம்!

கர்நாடகாவில் அரசுப் பள்ளிகளில் கல்வி சுற்றுலா செல்ல அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன் படி KSRTC எனப்படும் மாநில அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி சுற்றுலா

கர்நாடகாவில் இயங்கி வரும் அரசுப் பள்ளிகளில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படும். இந்நிலையில் கல்வி சுற்றுலா செல்ல திட்டமிடுவோருக்கு கர்நாடகா அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதாவது பள்ளிகளில் கல்வி சுற்றுலா செல்ல KSRTC எனப்படும் மாநில அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2.20 லட்சம் மாணவர்கள் அரசு பேருந்துகள் மூலம் சுற்றுலா சென்றுள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

ஆனால் இந்த ஆண்டு அரசு பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் செய்யும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தினசரி 20 லட்சம் பயணிகள் அரசு பேருந்துகளில் பயணித்து வருகின்றனர். அதன் காரணமாக மாநகர பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே கல்வி சுற்றுலா செல்ல போதிய அளவில் KSRTC பேருந்துகள் ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

TET நியமனத்தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு.. ஆசிரியர் பணி உங்களுக்கு தான் – உடனே பாருங்க!

அதனால் அரசு இதற்காக பிரத்யேக ஏற்பாடு செய்து வருவதாக தலைமை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அமைச்சர் இராமலிங்க ரெட்டி இந்த ஆண்டும் போதிய எண்ணிக்கையில் பேருந்துகள் இருப்பதாகவும், வழக்கம் போல் போக்குவரத்து துறையிடம் விண்ணப்பித்து பேருந்துகளை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!