அரசு பணி கல்வித்தகுதி விதிகள் சர்ச்சை  – நீதிமன்றத்தின் உத்தரவு!

0
அரசு பணி கல்வித்தகுதி விதிகள் சர்ச்சை

அரசு துறைகளில் உள்ள அரசு பணிகளுக்கான கல்வி தகுதிகளை பூர்த்தி செய்வது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று விசாரணையில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவு:

அரசு கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் காலிப்பணியிடங்களை அறிவித்து, விண்ணப்பங்களை பெறுவதாக தெரிவித்திருந்தது. இப்பணிக்கு விண்ணப்பித்திருந்த கோபி கிருஷ்ணா என்பவர் விண்ணப்பத்தை தேர்வு வாரியம் நிராகரிப்பு செய்யப்பட்டது. இதனை எதிர்த்து உயர் உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து மீண்டும் வழக்கு மேல் முறையீடு செய்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணையில் மனுதாரர் தரப்பிலிருந்து அரசு விதிமுறைகளின் படி நிர்ணயித்துள்ள கல்வி தகுதியை மனுதாரர் பெற்றுள்ள போதிலும், விண்ணப்பம் நிராகரிப்பு செய்யப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்திருந்தார்.

NTPC ஆணையத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – 110+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

இதற்கு நீதிபதிகள் மனுதாரர் குறிப்பிட்ட கல்வி தகுதியை பெற்றுள்ளார். ஆனால் அரசாணையில் குறிப்பிட்டுள்ள முறைப்படி கல்வித் தகுதி பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகவும். அரசாணையின்படி பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, அதன் பின்னர் மூன்று ஆண்டு பட்டப்படிப்பு என்ற வரிசையில் தான் கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். ஆனால மனுதாரர் பட்டப்படிப்பு, முதுநிலை படிப்பு, தேசிய தகுதி தேர்வு என்று தகுதிகளை பெற்ற பின்னர் 2019 ஆம் ஆண்டு தனித்தேர்வு வாயிலாக பிளஸ் டூ தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த நடைமுறை காரணமாகத்தான் உதவி பேராசிரியர் பணிக்கான விண்ணப்பம் நிராகரிப்பு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சமூக நலன் கருதி மத்திய, மாநில அரசுகள் இதற்கான சட்டத்தை மறு ஆய்வு செய்யலாம். ஆனால் தற்போது வரை உள்ள சட்டத்தை பின்பற்றி தான் தீர்ப்பளிக்க முடியும் என்று கூறி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!