பொங்கல் பரிசு அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்க வேண்டும் – தமிழக முதல்வருக்கு கோரிக்கை!!’

0
பொங்கல் பரிசு அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்க வேண்டும் - தமிழக முதல்வருக்கு கோரிக்கை!!'
பொங்கல் பரிசு அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்க வேண்டும் - தமிழக முதல்வருக்கு கோரிக்கை!!'
பொங்கல் பரிசு அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்க வேண்டும் – தமிழக முதல்வருக்கு கோரிக்கை!!’

தமிழக அரசு சார்பாக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஓய்வூதியதாரர்கள் சி மற்றும் டி பிரிவினருக்கு மட்டுமே பொங்கல் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று கடந்த ஆண்டு அறிவித்த நிலையில் இந்த ஆண்டு ஏ,பி,சி,டி என அனைத்து பிரிவினருக்கும் பொங்கல் பரிசு வழங்க அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர்கள் கூட்டமைப்பு சார்பில் முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

பொங்கல் பரிசுத்தொகை:

பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள மக்களுக்கு பொங்கல் பொருள்களும், 2500 ரொக்கமும் வழங்குகிறது. இந்நிலையில் ஏற்கனவே தமிழக அரசு பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க அரசு உத்தரவிட்டுருந்தது. ஆனால் கடந்த ஆண்டு ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஓய்வூதியதாரர்களுக்கு மட்டும் ரூபாய் 500 வழங்கப்பட்டது.

சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை முறைகேடு – பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் புது உத்தரவு!!

இந்த ஆண்டு பொங்கல் பரிசு குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதுகுறித்து அகி லபாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர்கள் கூட்டமைப்பு, விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளர் ராமலிங்கம் முதல்வருக்கு மனு ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், “ஓய்வூதியதாரர்களுக்கு 2020-2021 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத்தொகை ரூபாய் 500-ஐ பென்ஷனர்கள் மற்றும் குடும்பபலன் பெறும் பென்சனர்கள் அனைத்து பிரிவினருக்கும் வழங்க வேண்டும்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழி பாடம் கட்டாயம் – ஆசிரியர்கள் கோரிக்கை மனு!!

அனைத்து பென்ஷனர்களுக்கும் பிரிவு பார்க்காமல் பொங்கல் பரிசு 2017 வரை வழங்கிய நிலையில் கடந்த 2018ம் ஆண்டு முதல் சி,டி பிரிவை சேர்ந்த பென்ஷனர்களுக்கு மட்டும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக பலர் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த வருடம் 2021 ஆண்டிற்கான பொங்கல் பரிசுத்தொகையை ஏ,பி,சி,டி என அனைத்து பிரிவு ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்க வேண்டும்” என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

Velaivaippu Seithigal 2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!