100% பணியாளர்களுடன் வாரம் 5 நாட்கள் மட்டுமே வேலை – தமிழக அரசு அறிவிப்பு!!

1
100% பணியாளர்களுடன் வாரம் 5நாட்கள் மட்டுமே வேலை- தமிழக அரசு அறிவிப்பு!!
100% பணியாளர்களுடன் வாரம் 5நாட்கள் மட்டுமே வேலை- தமிழக அரசு அறிவிப்பு!!
100% பணியாளர்களுடன் வாரம் 5 நாட்கள் மட்டுமே வேலை- தமிழக அரசு அறிவிப்பு!!

கொரோனா ஊரடங்கு காரணமாக அரசு பணியாளர்கள் வேலைகள் தடைபட்ட நிலையில் ஆரம்பகால வேலைகளை முடிப்பதற்காக வாரத்தில் 6 நாட்கள் பணிபுரிய அறிவிப்பு வெளியிட்ட நிலையில், தற்போது வருகிற ஜனவரி 1 முதல் அரசு அலுவலகங்கள் வாரத்தில் 5 நாட்கள் மட்டும் 100% ஊழியர்களுடன் செயல்பட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு உத்தரவு:

கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. பலர் போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் வேலைகளுக்கு செல்ல முடியாத நிலை. அதனால் பல அரசு அலுவலகங்களில் வேலை தேக்கம் ஏற்பட்டது.

TNPSC குரூப் 1 வினாத்தாள் 2021 – தேர்வு மையத்திற்கு வருகை, தீவிர கண்காணிப்பு!!

பல தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிந்தனர். ஆனால் அரசு அலுவலங்களில் அந்த வசதி இல்லை.சிலர் நேரில் சென்றால் மட்டுமே அந்த வேலைகளை முடிக்கப்படும் என்ற நிலை உள்ளது. இதனால் அரசின் பல தளர்வுகளுக்கு பின் அரசு அலுவலகங்களில் 50% பணியாளர்களுடன் வாரத்தில் 6 நாட்கள் வேலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது.

டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம்- தமிழகத்திற்கு மத்திய அரசு விருது!!

அதன்பின் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 100% ஊழியர்களுடன் வாரத்தில் சனிக்கிழமை உட்பட 6 நாட்கள் வேலை செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் காரணத்தினால் மீண்டும் இயல்புநிலைக்கு திரும்ப தமிழக அரசு அலுவலகங்களில் வருகிற ஜனவரி 1-ஆம் தேதி முதல் வாரத்தில் 5 நாட்கள் 100% ஊழியர்களும் பணியாற்றலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இந்த அறிவிப்பை தமிழக அரசு சார்பாக தலைமை செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டார்.

Velaivaippu Seithigal 2021

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!