இந்திய அரசின் பத்ம விருதுகள் 2021 – விண்ணப்பிப்பது எப்படி?

0
இந்திய அரசின் பத்ம விருதுகள் 2021 - விண்ணப்பிப்பது எப்படி?
இந்திய அரசின் பத்ம விருதுகள் 2021 - விண்ணப்பிப்பது எப்படி?
இந்திய அரசின் பத்ம விருதுகள் 2021 – விண்ணப்பிப்பது எப்படி?

இந்திய அளவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு அரசு சில விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில் பத்ம விருதுகளுக்காக விண்ணப்பம் செய்வதற்கு சில வழிகாட்டு நடைமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பத்ம விருதுகள்

ஆண்டு தோறும் இந்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள், பத்ம விபூஷன், பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கொடுக்கப்பட்டு வருகிறது. அதாவது கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல், பொறியியல், பொது காரியங்கள், குடிமை சேவை, வர்த்தகம் மற்றும் தொழில்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து மிகச் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் இவ்விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுகிறது.

இந்தியாவில் 12 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி – ஓரிரு நாட்களில் அனுமதி!

அந்த வகையில் அனைத்து துறைகளிலும் மிக சிறப்பான பங்களிப்பை கொடுத்தவர்களுக்கு ‘பத்ம விபூஷன்’ விருதும், உயர் வரிசையில் சிறப்பான பங்களிப்புக்கு ‘பத்ம பூஷன்’ விருதும், புகழ்பெற்ற சேவைகளுக்காக ‘பத்மஸ்ரீ ‘ விருதும் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை தொடர்ந்து அறிவிக்கப்படும் இவ் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் இந்த ஆண்டும் வரவேற்கப்பட்டுள்ளன. அதன் படி பத்ம விருதுகளுக்கான விண்ணப்பப் படிவங்களை செப்டம்பர் 15 வரை அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இவ்விருதுகளுக்கான சிறந்த நபர்களை தேர்ந்தெடுக்கும் பணிகளை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், மத்திய அமைச்சர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள் உள்ளிட்டோர் பரிந்துரை செய்ததன் அடிப்படையில், இதுவரை மத்திய அரசு தேர்வு செய்து வந்தது. ஆனால் தற்பொழுதோ பல்வேறு துறைகளில் உலகுக்கு தெரியாத, புகழ் அடையாத சிறந்த சாதனையாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருதுகளுக்காக விண்ணப்பிக்க வேண்டியவர்கள் சில தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.

அதன் படி,
  • முதலாவதாக இனம், தொழில், பதவி, பாலினம் வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் இந்த விருதுக்கு பரிந்துரைக்கலாம்.
  • பொதுவாக உயிருடன் இல்லாதவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகிறதில்லை.
  • எனினும் சில சந்தர்ப்பங்களில் மிக தகுதியுடைய நபராக இருந்து, அவர் ஒரு ஆண்டுக்கு முன்னாக இயற்கை எய்திருந்தால் அவர்களது பெயரையும் பரிந்துரைக்கலாம்.
  • அடுத்ததாக மருத்துவம் மற்றும் விஞ்ஞானம் தவிர பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட அனைத்து அரசு துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படாது.
விண்ணப்ப வழிமுறைகளின் படி,
  • பத்ம விருதுகளுக்கான https://padmaawards.gov.in இணையதளம் மூலமாக விண்ணப்பப்படிவங்களை செலுத்தலாம்.
  • முதலாவது கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் தேவையான அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • அதாவது விருதுக்கு தகுதியுடைய நபரது சாதனைகள், செயல்பாடுகள், துறை ரீதியிலான சேவைகள் உள்ளிட்ட தகவல்களை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
  • இது குறித்த கூடுதல் தகுதிகள் மற்றும் விதிமுறைகளை https://padmaawards.gov.in/AboutAwards.aspx என்ற இணையதளம் மூலம் நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

இவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் பத்ம விருது குழுவுக்கு அனுப்பப்படும். பிரதமர் தலைமையில் உருவாக்கப்பட்ட இக்குழுவின் தலைமை பொறுப்பில் அமைச்சரவை செயலாளர் அவர்களும் உள்துறை செயலாளர், ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் முக்கிய பிரபலங்கள் உள்ளிட்ட 6 பேர் வரை உறுப்பினர்களாக இருப்பார்கள். விருதுக்கான தகுந்த நபரை தேர்ந்தெடுத்த பின்னர் குழு அனுப்பும் பரிந்துரையின் கீழ் உள்ள பட்டியலில் உள்ளவர்கள் பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று விருதுக்கான இறுதிப் பட்டியலில் இடம் பிடிப்பார்கள்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!