ரேஷன் அட்டைதாரருக்கு ரூ.1000 பொங்கல் பரிசு – அரசு முக்கிய அறிவிப்பு!

0
ரேஷன் அட்டைதாரருக்கு ரூ.1000 பொங்கல் பரிசு - அரசு முக்கிய அறிவிப்பு!
ரேஷன் அட்டைதாரருக்கு ரூ.1000 பொங்கல் பரிசு - அரசு முக்கிய அறிவிப்பு!
ரேஷன் அட்டைதாரருக்கு ரூ.1000 பொங்கல் பரிசு – அரசு முக்கிய அறிவிப்பு!

வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசாக இம்முறை துணிக்கு பதிலாக, ரூ.1000 வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

பொங்கல் பரிசு

தமிழகத்தின் அண்டை யூனியன் பிரதேசமான புதுச்சேரி முழுவதும் நாளை (ஜன.14) பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு வழக்கமாக கொடுக்கப்படும் இலவச துணிகள் வழங்கப்படாது என்றும், அதற்கு பதிலாக ரூ.1,000 குடும்ப தலைவியின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஜீவா தனது மகளுடன் பொங்கல் கொண்டாட்டம் – ரசிகர்கள் உற்சாகம்!

வழக்கமாக புதுச்சேரியில் ஒவ்வொரு தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற பண்டிகைகளின் போது வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகள் மற்றும் ஆதி திராவிடர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு இலவசமாக சேலை, வேட்டி மற்றும் துண்டுகள் கொடுக்கப்படும். ஆனால் இம்முறை பொங்கல் பரிசாக துணிகளை கொடுப்பதற்கு கொள்முதல் செய்வதில் சில முறைகேடுகள் நடைபெறுள்ளதாகவும், இதனால் ரேஷன் அட்டைதாரர்களுக்கு துணிகளுக்கு பதிலாக பணத்தை வழங்கவேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கைகளை செயல்படுத்துவது தொடர்பாக முன்னாள் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி மற்றும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இருவருக்கும் இடையே சில மோதல் போக்குகளும் உருவாகி இருந்தது. இந்நிலையில் வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு குடும்ப அட்டை தாரர்களுக்கும் இலவச துணிக்கு பதிலாக ரூ.1000 ரொக்கமாக வங்கி கணக்குகளுக்கு செலுத்தப்படும் என்று அமைச்சர் தேனீ ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.

மத்திய அரசு சார்பில் அனைவரும் ரூ.5000 கொரோனா உதவித்தொகை? உண்மை நிலவரம் இதுதான்!

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள உத்தரவில், ‘புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை, வறுமைகோட்டிற்கு கீழ் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்கள், பழங்குடியினர், மீனவர்கள், நெசவாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நீங்கலாக, சுமார் 1,27,789 வறுமைகோட்டிற்கு கீழ் வசிக்கும் ஒரு நபர் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.500 மற்றும் இரண்டிற்கும் மேற்பட்ட குடும்ப நபர்கள் உள்ள அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில்13.01.2022 அன்று செலுத்தப்படும். இதற்காக ரூ.12.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!