விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஜீவா தனது மகளுடன் பொங்கல் கொண்டாட்டம் – ரசிகர்கள் உற்சாகம்!

0
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஜீவா தனது மகளுடன் பொங்கல் கொண்டாட்டம் - ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஜீவா தனது மகளுடன் பொங்கல் கொண்டாட்டம் - ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஜீவா தனது மகளுடன் பொங்கல் கொண்டாட்டம் – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா வேடத்தில் நடிக்கும் நடிகர் வெங்கட் தனது மகளுடன் பொங்கல் கொண்டாடி வருவதை புகைப்படமாக வெளியிட்டுள்ளார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஜீவா:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்த ஒற்றுமை நாளுக்கு நாள் குறைந்து வருகின்றது. அந்த வீட்டின் ஆண்கள் வழக்கம் போல் ஒற்றுமையாக உள்ள போதிலும், பெண்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வது கதையின் போக்கை மாற்றியுள்ளது. வீட்டின் கடைக்குட்டி தம்பி கண்ணன் குடும்பத்தினருக்கு தெரியாமல் காதல் திருமணம் செய்து கொண்ட பின்னர், கண்ணனை வீட்டை விட்டு அனுப்பி விட்டனர். தற்போது இவர்கள் மீண்டும் வீட்டிற்குள் வந்துள்ளனர்.

விஜய் டிவி பாரதி கண்ணம்மா வினுஷா தேவி யார் தெரியுமா? ரசிகர்களை ஷாக் ஆக்கிய தகவல்கள்!

அதற்கேற்றார் போல் பிரச்சனைகளும் அதிகமாகி வருகின்றது. மீனாவும், ஜீவாவும் காதலித்து திருமணம் செய்து கொள்வார்கள். வசதியான வீட்டு பெண்ணாக வரும் மீனா, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் எந்த விஷயத்திலும் ஒட்டாமல் தனித்து இருப்பார். இதனால் மீனாவிற்கு, ஜீவாவிற்கும் அடிக்கடி நடக்கும் சண்டைகள் சீரியலில் மிகவும் பிரபலம். இதனால் இந்த ஜோடிக்கு தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது. மீனாவை அந்த வீட்டில் அனைவரும் கவனித்து கொள்ளும் விதத்தை பார்த்து நாளடைவில் மீனாவே ஜீவா குடும்பத்துடன் ஒட்ட தொடங்கிவிடுவார்.

‘செம்பருத்தி’ ஷபானா, ஆர்யன் விவாகரத்து வதந்தி – ஒரே போட்டோவில் முற்றுப்புள்ளி வைத்த ஜோடி!

இப்படி இந்த ஜோடி மிகவும் பிரபலமாக உள்ளது. ஜீவா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் வெங்கட் இதற்கு முன்னதாக பல சீரியல்களிலும் நடித்துள்ளார். ஆனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான் இவருக்கு அதிக புகழை பெற்று தந்தது. இவர் தனது மனைவியுடன் ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். தற்போது அதேபோல், தனது மகள் தேஜுவோடு சூப்பர் டாடி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். தற்போது பொங்கல் வருவதை ஒட்டி நடத்தப்படும் நிகழ்ச்சியில் மக்களுடன் வெங்கட் எடுத்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here