கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு குட் நியூஸ் – தனிநபர் கடன் தொகை ரூ.10 லட்சம்!

0
கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு குட் நியூஸ் - தனிநபர் கடன் தொகை ரூ.10 லட்சம்!
கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு குட் நியூஸ் - தனிநபர் கடன் தொகை ரூ.10 லட்சம்!
கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு குட் நியூஸ் – தனிநபர் கடன் தொகை ரூ.10 லட்சம்!

கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் தனிநபர் கடன் தொகையின் உச்ச வரம்பை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க அரசு சார்பில் அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தனிநபர் கடன்தொகை:

பணியாளர்கள் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த 2012ம் ஆண்டு அவர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையின் உச்ச வரம்பினை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சம் ஆக உயர்த்தி அரசு ஆணை வழங்கியது. அதன் பிறகு கடந்த 2017ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசின் அறிக்கையில், ஊழியர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையின் உச்ச வரம்பு ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சம் ஆக உயர்த்தி அரசு ஆணை வழங்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

தற்போது பணியாளர்கள் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் தனிநபர் கடன் தொகையின் உச்ச வரம்பை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் தொடர்ந்து அரசுக்கு வைக்கப்பட்டு வந்தது. இதனால் இந்த கோரிக்கையினை ஏற்று கடன் தொகையை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு தான் கடன் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசின் நிபந்தனைகள்:

  • பணியாளரின் அதிகபட்ச கடன் தொகை ரூ.10 லட்சமானது, அடிப்படை சம்பளம், தனி சம்பளம் மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றின் 20 மடங்கு தொகை அல்லது இவற்றில் எது குறைவாக உள்ளதோ அந்த தொகை கடனாக வழங்கப்படும்.
  • இவ்வாறு கடன் தொகை வழங்கப்படும் போது, ஏற்கனவே வழங்கப்பட தனிநபர் கடன் தொகையில் உள்ள நிலுவை தொகை கழித்து, புதிதாக உயர்த்தி வழங்கப்பட உள்ள கடனுக்கான மாதாந்திர தவணையும் சேர்த்து பணியாளர் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் சம்பளம் அவருடைய மொத்த சம்பளத்தில் 25% க்கு குறைவாக இருக்க கூடாது என்ற நிபந்தனைக்கு உட்பட்டு தான் புதிய கடன் வழங்கப்பட வேண்டும்.
  • வைப்பீடுகள் மீது வழங்கப்படும் அதிகபட்ச வட்டிக்கு கூடுதலாக 2 சதவீதம் வட்டியுடன் 120 மாதாந்திர தவணையில் கடன் திருப்பி செலுத்தப்பட வேண்டும்.

மேற்கூறியவாறு கடன் வழங்கும் போது பணியாளர் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கங்களின் நிதி நிலையை கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அரசின் இந்த அறிக்கையானது அனைத்து பணியாளர் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கங்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!