சென்னை: தொடர்ந்து அதிரடியாக குறைந்து வரும் தங்க விலை – உடனே போய் வாங்குங்க!

0
சென்னை: தொடர்ந்து அதிரடியாக குறைந்து வரும் தங்க விலை - உடனே போய் வாங்குங்க!
சென்னை: தொடர்ந்து அதிரடியாக குறைந்து வரும் தங்க விலை - உடனே போய் வாங்குங்க!
சென்னை: தொடர்ந்து அதிரடியாக குறைந்து வரும் தங்க விலை – உடனே போய் வாங்குங்க!

கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் காரணமாக பொதுமக்கள் அதிகம் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தனர். இதனால் மக்கள் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதிக அளவில் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் இன்று அதிகமாக தங்கநகைகளை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை:

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. இருப்பினும் நகைப்பிரியர்கள் தங்க நகைகளில் முதலீடு செய்து தான் வருகின்றனர். ஏனென்றால் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தங்கத்தில் முதலீடு செய்வது தான் பாதுகாப்பான திட்டமாகவும், எதிர்காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் எண்ணுகின்றனர். மேலும் சிலர் தங்க நகை சீட்டு முறையிலும் தங்க நகைகள் வாங்கி கொண்டிருக்கின்றனர். அதாவது நாட்டில் ஏற்றுமதி, இறக்குமதி பாதிப்பினாலும் அவ்வப்போது தங்கநகையின் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.

கடந்த ஜூலையில் தங்கத்திற்கான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியதை அடுத்து, தங்கத்தின் விலை அதிவேகத்தில் உயர்ந்து, விற்பனை ஆனது. அதன் பிறகு தங்கத்தின் விலை குறைவதும், பின் உயர்வதுமாக இருந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக நகை விலை குறைக்கப்பட்டாலும், அடுத்த சில நாட்களே குறைக்கப்பட்ட விலையை விட இரு மடங்கு விலையேற்றம் அடைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இம்மாத தொடக்கத்திலேயே தங்கத்தின் விலையானது சவரனுக்கு 160 குறைந்து, ஒரு சவரன் ரூ.38,360-க்கும், ஒரு கிராம் ரூ.20 குறைந்து, ரூ.4,795 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ஆனால், கடந்த 12ம் தேதி வழக்கத்திற்கு மாறாக தங்க விலையானது, திடீரென அதிகரித்து சவரன் ரூ.40 உயர்ந்து, ரூ.39,120-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்து, ரூ.38,704க்கு விற்பனை ஆனது. மேலும் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.11 குறைந்து, ரூ.4,838 க்கு விற்பனை ஆனது. நேற்றை விட இன்றும் தங்கத்தின் விலை சரிவை கண்டுள்ளது.

தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டத்திற்கு 15 நாட்கள் 144 தடை உத்தரவு? காரணம் இது தான்!

இன்று காலை நிலவரப்படி,சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து, ரூ.38,576-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.28 குறைந்து, ரூ.4,822-க்கு விற்பனை ஆகிறது. மேலும் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 80 காசுகள் குறைந்து, ரூ.62.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று தங்க விலை குறைந்து இருப்பது நகை பிரியர்களிடம் அதிக மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!