GATE மதிப்பெண் அட்டை 2023 – வெளியீடு!

0
GATE மதிப்பெண் அட்டை 2023 - வெளியீடு!
GATE மதிப்பெண் அட்டை 2023 - வெளியீடு!
GATE மதிப்பெண் அட்டை 2023 – வெளியீடு!

இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) பொறியியல் பட்டதாரி திறன் தேர்வு (கேட்) 2023 ஆம் ஆண்டிற்கான Score Card எனப்படும் மதிப்பெண் அட்டையை இன்று மாலை அதிகாரப்பூர்வ வலைத்தளமான gate.iitk.ac.in ல் வெளியிட்டு உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

GATE தேர்வு தேதி:

பிப்ரவரி 4, 5, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் Graduate Aptitude Test in Engineering (GATE) தேர்வு நடைபெற்றது. தேர்வு அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி, மார்ச் 21 ஆம் தேதி மாலை தேர்வு மதிப்பெண்கள் வெளியாகி உள்ளது.

TN 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் பதிவிறக்கம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

GATE இன் தற்காலிக விடைக்குறிப்புகள் பிப்ரவரி 21 அன்று வெளியிடப்பட்டது மற்றும் ஆட்சேபனைகள் பிப்ரவரி 25 வரை தேர்வர்களிடம் இருந்து வரவேற்கப்பட்டது. GATE தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்புகள் தேர்வு முடிவுகளுடன் வெளியிடப்பட்டது. மேலும் இதற்கான தேர்வு முடிவுகள் மார்ச் 16 ஆம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது.

GATE 2023 Score Card பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:

1. GATE இன் அதிகாரப்பூர்வ இணைய தளத்தைப் பார்வையிடவும்

2. இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில், ‘GATE 2023 Score Card ‘ என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

3. உங்கள் உள்நுழைவு விவரங்களை உள்ளிடவும்

4. அதன்பின்,Score Card திரையில் தோன்றும்.

5. இதை PDF ஆக பதிவிறக்கம் செய்து எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

Download GATE Score Card

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!