TN 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் பதிவிறக்கம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டினை மார்ச் 27 ஆம் தேதி அந்தந்த பள்ளியிலேயே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தேர்வு இயக்கம் அறிவித்துள்ளது.
ஹால் டிக்கெட்:
தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. 10 ஆம் வகுப்பு மாணவர்கள் ஏப்ரல் 6ம் தேதி நடக்க இருக்கும் தங்களது பொதுத்தேர்வினை எதிர்கொள்ள தற்போதிலிருந்தே தயாராகி வருகின்றனர்.
நாடு முழுவதும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. அச்சத்தில் தமிழக மக்கள் – அமைச்சர் கொடுத்த விளக்கம்!
இந்நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டை வரும் மார்ச் 27 ஆம் தேதி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்குனர் அறிவித்துள்ளார். மேலும், மார்ச் 27 ஆம் தேதி நண்பகல் அரசு தேர்வக இயக்கத்தின் இணையதளத்திற்கு சென்று அந்தந்த பள்ளியிலேயே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.