கண்ணம்மாவை பழி வாங்க நினைக்கும் கணேஷ், திருடி என புகார் – “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்து வருபவை!

0
கண்ணம்மாவை பழி வாங்க நினைக்கும் கணேஷ், திருடி என புகார் -
கண்ணம்மாவை பழி வாங்க நினைக்கும் கணேஷ், திருடி என புகார் – “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்து வருபவை!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா தன்னுடைய வேலையில் எல்லாம் நல்லபடியாக செய்து கொண்டிருக்க, அது கணேஷிற்கு பிடிக்காமல் இருக்கிறது. அதனால் கண்ணம்மாவை பழி வாங்க கணேஷ் திருட்டு பட்டம் காட்ட போகிறார். அதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா விக்ரம் மருத்துவமனையில் அட்மின் ஆபிஸராக வேலைக்கு சேர்கிறார். அப்போது பாரதிக்கு விவரம் தெரிய அனுபவம் இல்லாதவர்களை வேலைக்கு சேர்க்க வேண்டாம் என விக்ரமிடம் சொல்கிறார். ஆனால் விக்ரம் கண்ணம்மா மீது உள்ள நம்பிக்கையால் அவரிடம் முழு பொறுப்பையும் கொடுக்கிறார். கண்ணம்மாவும் அதை சரியாக செய்து முடிக்கிறார். இந்நிலையில் கண்ணம்மா கேன்டீனில் நல்ல சாப்பாடுகளை ஏற்பாடு செய்கிறார்.

Exams Daily Mobile App Download

ஆனால் அதுவும் பாரதிக்கு பிடிக்காமல் இருக்கிறது. இப்படி கண்ணம்மா என்ன வேலை செய்தாலும் பாரதிக்கு பிடிக்காமல் இருக்கிறது. பாரதிக்கு மட்டுமல்லாமல் கணேஷிற்கும் கண்ணம்மாவை பிடிக்கவில்லை. அவர் கண்ணம்மாவிற்கு பொறுப்புகள் வழங்கியதால் பிடிக்காமல் இருக்கிறார். சக்திக்கு ஆப்ரேசன் செய்ய இருப்பதில் கண்ணம்மாவிடம் பொறுப்புகளை கொடுக்க வேண்டாம் என பாரதி முடிவு செய்கிறார். அதனால் கணேஷிடம் பொறுப்பு கொடுக்கப்படுகிறது.

ஜீ தமிழ் “புதுப்புது அர்த்தங்கள்” சீரியலில் என்ட்ரி கொடுக்கும் நடிகை வனிதா – ப்ரோமோ ரிலீஸ்!

இந்நிலையில் கண்ணம்மாவின் முன்னெச்சரிக்கை ஏற்பாடு மூலமாக தான் சக்திக்கு ஆப்ரேசன் நடக்க இருக்கிறது. அதனால் பாரதிக்கு கண்ணம்மா மீது நல்ல எண்ணம் வருகிறது. ஆனால் கணேஷ் கண்ணம்மாவிற்கு பாராட்டுகள் கிடைப்பதை நினைத்து கோவமாக இருக்கிறார். கண்ணம்மாவை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என நினைத்து கண்ணம்மா மீது திருட்டு பட்டம் கட்ட முடிவு செய்கிறார். அதனால் கண்ணம்மா மருத்துவமனையில் இருந்து வெளியேறும் நிலை ஏற்படுகிறது. இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!